Singers : A. M. Raja and Jikki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

Female : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

Female : Iravinil ennai oru tharamenum
Anaithirunthaalum naan ketppen andro
Male : Iravugal thorum oru ninaivaaga
Irunthirunthaalum naan solven androo

Female : Ungal ullam indru maarum
Indha oodal maari koodal vandhu saerum
Male : Ennai maattru inbam oottru
Naan naanagum paadhaiyai kattu

Female : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

Male : Irundhadhu ondru iruppadhu ondru
Idaiyinil nindren naan engae solven

Female : Vidukadhai podhum vidai solla vendum
Manam mudithenae naan engae selven

Male : Aiyoo paavam indha neram
Innum maari maari solli enna laabam

Female : Innum enna kannan sonna
Radhai kadhai pola varungal pinna

Female : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

பெண் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

பெண் : இரவினில் என்னை ஒரு தரமேனும்
அணைத்திருந்தாலும் நான் கேட்பேன் அன்றோ
ஆண் : இரவுகள் தோறும் ஒரு நினைவாக
இருந்திருந்தாலும் நான் சொல்வேன் அன்றோ

பெண் : உங்கள் உள்ளம் இன்று மாறும்- இந்த
ஊடல் மாறி கூடல்வந்து சேரும்
ஆண் : என்னை மாற்று இன்பம் ஊற்று
நான் நானாகும் பாதையைக் காட்டு

பெண் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

ஆண் : இருந்தது ஒன்று இருப்பது ஒன்று
இடையினில் நின்றேன் நான் எங்கே செல்வேன்

பெண் : விடுகதை போதும் விடை சொல்ல வேண்டும்
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்

ஆண் : ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்

பெண் : இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன

பெண் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here