Singers : C. S. Jayaraman and Padmini
Music by : Vishwanathan – Ramamoorthy
Female : Aththaan neengal kolaikaararaa
Kotravanai kondreergala
Koorungal aththaan koorungal
Male : Eedattra pathiniyin inbathai kondravan naan
Aval idhayathil kondhalitha ennathai kondravan naan
Vaazha thagundhavalai vaazhaamal vaithuvittu
Paazhum parathaiyinaal panbudhanai kondravan naan
Male : Andha kolaigalukkkkae aalaai irundhu vittaen
Ini endha kolai seidhaalum ennadi en gyanappennae..ae…
Ennadi en gyanappennae
Ennadi en gyanappennae
Male : Aarambhamaavadhu pennukkullae
Avan aadi adanguvadhu mannukkullae
Manidhan aarambhamaavadhu pennukkullae
Avan aadi adanguvadhu mannukkullae
Aadi adanguvadhu mannukkullae
Aaraindhu paar mana kannukkullae
Aathiran kollaadhae nenjukkullae
Aaraindhu paar mana kannukkullae
Aathiran kollaadhae nenjukkullae
Male : Aarambhamaavadhu….
Manidhan aarambhamaavadhu pennukkullae
Avan aadi adanguvadhu mannukkullae
Female : Aththaan aththaan
Ungal meedhu kodum pazhi vandhirukkiradhae
Aththaan en meedhu unmaiyaaga anbirundhaal
Anjaamal unmaiyai sollungal
Yaarukkum anjaamal unmaiyai sollungal
Male : Anbai keduthu nal aasaiyai kondravan
Anji nadappaano gyanappennae..ae…
Anbai keduthu nal aasaiyai kondravan
Anji nadappaano gyanappennae..ae…
Thunbathai katti sumakka thunindavan
Sonnaalum kaetpaano gyanappennae
Sonnaalum kaetpaano gyanappennae
Male : Aarambhamaavadhu….
Manidhan aarambhamaavadhu pennukkullae
Avan aadi adanguvadhu mannukkullae
Female : Aththaan unmaiyai koora mudiyaadhabadi
Avvalavu periya thavaru enna seithuvitteergal
Male : Thavarukku thavaraana thavarai purindhu vittu
Thanippattu ponavan gyanappennae…ae…..ae….
Thavarukku thavaraana thavarai purindhu vittu
Thanippattu ponavan gyanappennae…
Thanippattu ponavan gyanappennae
Padhari padhari nindru kadhari pulambinaalum
Payanpattu varuvaano gyanappennae
Payanpattu varuvaano gyanappennae
Male : Aarambhamaavadhu….
Manidhan aarambhamaavadhu pennukkullae
Avan aadi adanguvadhu mannukkullae
Aaraindhu paar mana kannukkullae
Aathiran gollaadhae nenjukkullae
Female : Aaaaaaaaaa…… aththaan… aththaan…..
Idhu enna aththaan… idhu enna….
Ungal kangal engae aththaan…..
Ungal kangal engae…..aththaan
Male : Koduththavanae parithu kondaandi
Maanae valarthavanae veruthu vittaandi
Kannai koduththavanae parithu kondaandi
Maanae valarthavanae veruthu vittaandi
Poruthamaana thunaiyirundhum
Pongi varum azhagirundhum
Pona pakkam poga vittaen paarvaiyai
Avan poruthirundae purindhu kondaan vaelaiyai
Poruthamaana thunaiyirundhum
Pongi varum azhagirundhum
Pona pakkam poga vittaen paarvaiyai
Avan poruthirundae purindhu kondaan vaelaiyai
Kannai koduthavanae parithu kondaandi
Maanae valarthavanae veruthu vittaandi
Female : Karunaiyae vadivamaana dheivamaa
Ungal kangalai parithadhu
Male : Edhiril vandhu kedukkavillai
Idhayamidam kodukkavillai
Edhiril vandhu kedukkavillai
Idhayamidam kodukkavillai
Engirundo yaevivittaan kiliyai
Adhu en thalaiyil pottadhadi pazhiyai
Kannai koduthavanae parithu kondaandi
Maanae valarthavanae veruthu vittaandi
Female : Needhi nilai pera
En naetriyil kungumam thigazha
Unmaiyai koorungal…
Ungal manaivi kaetkiraal…..
En manjalum kungumamum kaetkirathu athathaan…
Male : Singaaram kettu… siraippatta paavikku…
Samsaaram edhukkadi …thangam
Samsaaram edhukkadi….
Singaaram kettu… siraippatta paavikku…
Samsaaram edhukkadi
Thangam samsaaram edhukkadi….
Singaaram kettu… siraippatta paavikku…
Samsaaram edhukkadi
Thangam samsaaram edhukkadi….
Male : Manaiviyai kuzhandaiyai marandhu pirindhavanai
Vaazhthuvadhaagaadhadi…ee….ee…ee…
Manaiviyai kuzhandaiyai marandhu pirindhavanai
Vaazhthuvadhaagaadhadi
Thangam mannikka koodaaadhadi
Singaaram kettu… siraippatta paavikku…
Samsaaram edhukkadi
Thangam samsaaram edhukkadi….
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பத்மினி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : அத்தான் நீங்கள் கொலைக்காரரா
கொற்றவனைக் கொன்றீர்களா
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்
ஆண் : ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணங்களைக் கொன்றவன்
நான்
வாழத் தகுந்தவளைக் வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்
ஆண் : அந்த கொலைகளுக்கே ஆளாய் இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும்
என்னடி என் ஞானப்பெண்ணே….ஏ…..
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே
ஆண் : ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆண் : ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
பெண் : அத்தான் அத்தான்
உங்கள் மீது கொடும் பழி வந்திருக்கிறதே
அத்தான் என் மீது உண்மையாக அன்பிருந்தால்
அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
ஆண் : அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே….ஏ…..
அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே….ஏ…..
துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
ஆண் : ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
பெண் : அத்தான் உண்மையைக் கூற முடியாதபடி
அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்
ஆண் : தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே….ஏ…..ஏ…..
தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே…
பதறி பதறி நின்று கதறி கதறிப் புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆண் : ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
பெண் : ஆஆஆஆஆஆஆஆ……
அத்தான்……அத்தான்….
இது என்ன அத்தான் …….இது என்ன…
உங்கள் கண்கள் எங்கே அத்தான்……..
உங்கள் கண்கள் எங்கே
ஆண் : கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போகவிட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போகவிட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
பெண் : கருணையே வடிவமான தெய்வமா
உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது
ஆண் : எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
பெண் : நீதி நிலைப்பெற
என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையைக் கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள்
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்
ஆண் : சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
ஆண் : மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி….ஈ……ஈ……ஈ…..
மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி…
தங்கம் மன்னிக்ககூடாதடி
சிங்காரம் கேட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் எதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி