Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ……………

Female : Egypt naattin ilavarasi
Ilamai thavazhum ezhilarasi
Egypt naattin ilavarasi
Ilamai thavazhum ezhilarasi

Female : Cessar kangal paarththa mugam
Antha paramparaithaanae intha mugam
Cessarin kangal paarththa mugam
Antha paramparaithaanae intha mugam

Female : Neela nadhi vennilavu
Poe vara vendum thaenilavu
Kaaladigal thaalamida
Vaazhnthida vendum oor iravu

Female : Ninaiththu…..ninaiththu….mayangi….mayangi
Ninaiththu…..ninaiththu….mayangi….mayangi
Kaaththu kidanthaen unakkaaga
Nerunga nerunga vivaram puriyum
Neram varattum namakkaaga

Female : Egypt naattin ilavarasi
Ilamai thavazhum ezhilarasi

Female : ……………

Female : Jaadaiyilae sirikka vaippom
Vaarththaigal inga thevaiyillai
Thevaiyendraal pesi kolom
Kangalai polae paashaiyillai

Female : Nilaiyai maranthu idaththai maranthu
Nilaiyai maranthu idaththai maranthu
Thoodhu viduvom sila neram
Kanavu palikkum ninaivu nadakkum
Kaiyil varattum adhikaaram

Female : Egypt naattin ilavarasi
Ilamai thavazhum ezhilarasi

Female : Medaiyilae mella mella
Aadida vendum sugamaaga
Maeniyilae kadhai padiththu
Paarththida vendum padhamaaga

Female : Vayathai ninaiththu uravai verukkum
Vayathai ninaiththu uravai verukkum
Pengalai polae naanillai
Neram kuraivu ninaivu athigam
Kaalam ponaal porulillai

Female : Egypt naattin ilavarasi
Ilamai thavazhum ezhilarasi
Cessarin kangal paarththa mugam
Antha paramparaithaanae intha mugam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………

பெண் : எகிப்து நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி
எகிப்து நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி

பெண் : சீசரின் கண்கள் பார்த்த முகம்..
அந்த பரம்பரைதானே இந்த முகம்..
சீசரின் கண்கள் பார்த்த முகம்..
அந்த பரம்பரைதானே இந்த முகம்..

பெண் : நீல நதி வெண்ணிலவு
போய் வர வேண்டும் தேனிலவு..
காலடிகள் தாளமிட..
வாழ்ந்திட வேண்டும் ஓர் இரவு..

பெண் : நினைத்து…நினைத்து…..மயங்கி..மயங்கி..
நினைத்து…நினைத்து…..மயங்கி..மயங்கி..
காத்து கிடந்தேன் உனக்காக..
நெருங்க..நெருங்க..விவரம் புரியும்..
நேரம் வரட்டும் நமக்காக..

பெண் : எகிப்து நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி

பெண் : ……………………….

பெண் : ஜாடையிலே சிரிக்க வைப்போம்..
வார்த்தைகள் இங்கேத் தேவையில்லை..
தேவையென்றால் பேசிக் கொள்வோம்..
கண்களைப் போலே பாஷையில்லை..

பெண் : நிலையை மறந்து..இடத்தை மறந்து..
நிலையை மறந்து..இடத்தை மறந்து..
தூது விடுவோம் சில நேரம்..
கனவு பலிக்கும்..நினைவு நடக்கும்..
கையில் வரட்டும் அதிகாரம்….

பெண் : எகிப்து நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி

பெண் : மேடையிலே மெல்ல மெல்ல
ஆடிட வேண்டும் சுகமாக..
மேனியிலே கதை படித்து..
பார்த்திட வேண்டும் பதமாக..

பெண் : வயதை நினைத்து..உறவை வெறுக்கும்..
வயதை நினைத்து..உறவை வெறுக்கும்..
பெண்களைப் போலே நானில்லை..
நேரம் குறைவு..நினைவு அதிகம்..
காலம் போனால் பொருளில்லை..

பெண் : எகிப்து நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி
சீசரின் கண்கள் பார்த்த முகம்..
அந்த பரம்பரைதானே இந்த முகம்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here