Singer : Sid Sriram

Music by : D. Imman

Male : En iniya thanimayae
En iniya thanimayae
En iniya thanimayae…ae….ae…ae…
En iniya thanimayae….

Male : Pudhithaana adhikaalaiyo
Pugai soodum nedunjaalaiyo
Unnodu naan nadanthaal
Ellaam perazhagu

Male : Mazhai veezhum ila maalaiyo
Isaiyillaa idaivelaiyo
Ennodu nee nadanthaal
Inbam en ulagu

Male : Unnodu mattum thaan
En neram enadhu
Unnodu mattum thaan
Mei pesum manadhu

Male : Manitharin mozhi
Kettu… kettu…
Idhayam pazhuthaai
Unadhamaithiyil thaanae
Aanaen mulumuludhaai

Male : En iniya thanimayae
En iniya thanimayae
En iniya thanimayae…ae….ae…ae…
En iniya thanimayae….

Male : Alai modhum karai meedhilo
Manal paadham sudum podhilo
Unnodu naan nadanthaal
Mannae poochiragu

Male : Karaigindra adi vaanamo
Kuraiyaadha perundhooramo
Ennodu nee nadanthaal
Inbam en ulagu

Male : En thaayin karuvil
Ennodu pirandhaai
En vaazhvin mudivil
Ennodu irupaai

Male : Uravugal vandhu
Serum..neengum …
Needhaan nilaiyaai
Adharku unarkkoru
Nandri sonnen
Mudhal muraiyaai

Male : En iniya thanimayae
En iniya thanimayae
En iniya thanimayae…ae….ae…ae…
En iniya thanimayae….

Male : Idhuvarai karkaa
Kalaigal ellaam
Unnudan karkum velaiyilae
Ennuyir thozhi
Neeyenben neeyenben…

Male : Idhuvarai kaana
Kaatchigalai
Unnudan kaanum velaiyilae
Endhan kaadhal
Neeyenben neeyenben…

Male : Oru silar ennai nerunga
Ennidam pesa thodanga
Siru oodal kondu
Neengi pogindraai …

Male : Kavalaigal ennai varutha
Unnidam ennai thuratha
Un madiyai thandhu
Thaayaai aagindraai

Male : Ennai thuyilena anaithidu
Thanimaiyae
En kanavilum thodarnthidu
Thanimaiyae
Kan vizhikayil irundhidu
Thanimaiyae
Thanimaiyae

Male : En iniya thanimayae
En iniya thanimayae
En iniya thanimayae…ae….ae…ae…
En iniya thanimayae….

Male : En iniya thanimayae….ae
En iniya thanimayae…ohhh
En iniya thanimayae….eh eh hhh
En iniya thanimayae…

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ……ஏ…..ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால்
எல்லாம் பேரழகு

ஆண் : மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு

ஆண் : உன்னோடு மட்டும்தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது

ஆண் : மனிதரின் மொழி
கேட்டு…….கேட்டு….
இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே
ஆனேன் முழுமுழுதாய்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால்
மண்ணே பூச்சிறகு

ஆண் : கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு

ஆண் : என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்

ஆண் : உறவுகள் வந்து
சேரும் நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு
நன்றி சொன்னேன்
முதல் முறையாய்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : இதுவரை கற்கா
கலைகள் எல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி
நீயென்பேன் நீயென்பேன்….

ஆண் : இதுவரை காணா
காட்சிகளை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல்
நீயென்பேன் நீயென்பேன்….

ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க
என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு
நீங்கி போகின்றாய்

ஆண் : கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து
தாயாய் ஆகின்றாய்

ஆண் : எனை துயிலென அணைத்திடு
தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு
தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு
தனிமையே
தனிமையே

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : என் இனிய தனிமையே…..ஏ…..
என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here