Singer : P. S. Ramachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : En iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo
Sri raamanin sinthai thanil
Vaidhegithaan ennum vedham maarumo

Male : Oo….oo….en iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo
Sriraamanin sinthai thanil
Vaidhegithaan ennum vedham maarumo

Male : Nee eendreduththaai ennai sumanthu
Nalla nayaganai andru mananthu
Naan illai endraal enna aagum
Ingu innoru thaai varakkoodum

Male : Penn paavam endrum polaathu
Adhu veror pennaal theeraathu
Penn paavam endrum polaathu
Adhu veror pennaal theeraathu

Male : Oraayiram ennangalai
Yaaroduthaan ingu naanum solvatho

Male : Oo….oo….en iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo…..oo…..

Male : Orr needhipath endru irukkum
Ungal theerppilumaa intha kuzhappam
Naan ketpathellaam oru kelvi
Ungal needhikkum varumo tholvi

Male : Ellorukkum koorum niyaayangal
Adhu ingillai yaeno sollungal
Ellorukkum koorum niyaayangal
Adhu ingillai yaeno sollungal

Male : Oo….oo….en iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo…..oo…..

Male : Nee ullaththinaal siru kuzhanthai
Un vaarththaikalo oru mazhalai
Naan thaangi kolven unnai madiyil
En thaaraththaiyae pillai vadivil

Male : Yaezhaezhu jenmam endraalum
En jeevan neeyae ennaalum
Yaezhaezhu jenmam endraalum
En jeevan neeyae ennaalum

Male : Neer maaralaam nilam maaralaam
Yaar maarinum intha pantham maarumo

பாடகர் : பி. எஸ். ராமசந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ
ஸ்ரீ ராமனின் சிந்தைதனில்
வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண் : ஓ…..ஓ……என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ
ஸ்ரீராமனின் சிந்தைதனில்
வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண் : நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து
நல்ல நாயகனை அன்று மணந்து
நான் இல்லை என்றால் என்ன ஆகும்
இங்கு இன்னொரு தாய் வரக்கூடும்

ஆண் : பெண் பாவம் என்றும் பொல்லாது
அது வேறோர் பெண்ணால் தீராது
பெண் பாவம் என்றும் பொல்லாது
அது வேறோர் பெண்ணால் தீராது

ஆண் : ஓராயிரம் எண்ணங்களை
யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ….

ஆண் : ஓ……ஓ…….என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ……ஓ…….

ஆண் : ஓர் நீதிபதி என்று இருக்கும்
உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம்
நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி
உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி

ஆண் : எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்
அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்
எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்
அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

ஆண் : எண்ணங்களின் வண்ணப்படி
எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ…

ஆண் : ஓ……ஓ…….என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ……ஓ…….

ஆண் : நீ உள்ளத்தினால் சிறு குழந்தை
உன் வார்த்தைகளே ஒரு மழலை
நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில்
என் தாரத்தையே பிள்ளை வடிவில்

ஆண் : ஏழேழு ஜென்மம் என்றாலும்
என் ஜீவன் நீயே எந்நாளும்
ஏழேழு ஜென்மம் என்றாலும்
என் ஜீவன் நீயே எந்நாளும்

ஆண் : நீர் மாறலாம் நிலம் மாறலாம்
யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here