Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi
En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi
Pon veenai theru mannil veezha
Naan viduvaeno
Unakkaaga uyir pogum podhilum
Varuvaeno
Dhevadhai un vaasalae sannidhi
Kaadhalil kannai moodinaal nimmadhi

Male : En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi

Male : Aahaahaa… ohohoho… aahaahaa…
Kayal vizhiyinil yenai oru murai
Azhaithidu thaenae
Puyal mazhaiyinil nanaigira
Udamberiyudhu maanae

Male : Idhu varaiyinil mana kadhavinai
Adaithadhu podhum
Anu anuvena oru manadhinai
Udaithadhu podhum

Male : Ennai enni vaazhavillai
Unnai enni vaazhgiren
Unnai meendum vaazha vaikka
Vaazhum podhae saagiren
Ilai udhirndhu pogalaam
Vasantham meendum thondralaam
Kaalam maarum podhu
Neeyum maara koodaadhaa

Male : En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi

Male : Aahaa aahaa aahaa aahaa
Ilamaiyil oru azhagiya malar
Karugidalaamaa
Udalodu uyir mezhugena
Dhinam urugidalaamaa

Male : Pazhamaiyai udai
Pudhumaigal padai
Ezhundhiru pennae
Siraiyinai vidu sudhandhiramodu
Parandhidu kannae

Male : Naetru pona thaaliyodu
Vaazhkkai ellaam ponadhaa
Vaeru thaali vaeru maalai
Dhosham ingae aanadhaa
Meendum maalai soodalaam
Naalai neeyum vaazhalaam
Kaadhal illaa jeevan
Indha mannil engunduuu

Male : En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi
En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi
Pon veenai theru mannil veezha
Naan viduvaeno
Unakkaaga uyir pogum podhilum
Varuvaeno
Dhevadhai un vaasalae sannidhi
Kaadhalil kannai moodinaal nimmadhi

Male : En jeevanin paadalai keladi
En pechilum moochilum neeyadi

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
பொன் வீணை தெரு மண்ணில் வீழ
நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும்
வருவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண்ணை மூடினால் நிம்மதி

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

ஆண் : ஆஹாஹா… ஓஹோஹோஹோ…
ஆஹாஹா…….
கயல் விழியினில் எனை ஒரு முறை
அழைத்திடு தேனே
புயல் மழையினில் நனைகிற
உடம்பெரியுது மானே

ஆண் : இது வரையினில் மனக் கதவினை
அடைத்தது போதும்
அணு அணுவென ஒரு மனதினை
உடைத்தது போதும்

ஆண் : என்னை எண்ணி வாழவில்லை
உன்னை எண்ணி வாழ்கிறேன்
உன்னை மீண்டும் வாழ வைக்க
வாழும் போதே சாகிறேன்
இலை உதிர்ந்து போகலாம்
வசந்தம் மீண்டும் தோன்றலாம்
காலம் மாறும் போது
நீயும் மாறக் கூடாதா

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
இளமையில் ஒரு அழகிய மலர்
கருகிடலாமா
உடலோடு உயிர் மெழுகென
தினம் உருகிடலாமா

ஆண் : பழமையை உடை
புதுமையை படை
எழுந்திரு பெண்ணே
சிறையினை விடு சுதந்திரமோடு
பறந்திடு கண்ணே

ஆண் : நேற்று போன தாலியோடு
வாழ்க்கை எல்லாம் போனதா
வேறு தாலி வேறு மாலை
தோஷம் இங்கே ஆனதா
மீண்டும் மாலை சூடலாம்
நாளை நீயும் வாழலாம்
காதல் இல்லா ஜீவன்
இந்த மண்ணில் எங்குண்டு

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
பொன் வீணை தெரு மண்ணில் வீழ
நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும்
வருவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண்ணை மூடினால் நிம்மதி

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here