Singer : Vani Jairam

Music by : Ilayaraja and Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : En machchanukku kannaththilae machcham irukkum
Avar maarbula naan kuththina kili pachai irukkum

Female : Achchadichcha silaiya pola iruppaaru
Maththa aambaliyum mayakkumpadi sirippaaru
Pattanaththu veedhiyilae paaththeengalaa
Avara paaththavanga vivaram solla maatteengalaa

Female : En machchanukku kannaththilae machcham irukkum
Avar maarbula naan kuththina kili pachai irukkum

Female : En aththapulla kappusaami muththu irupaan
Paruva azhagu konjam oththa mookku kuththiyirukkum
Siththaanai kutiya pola nadappaaru
Ilanjittukkala kanda konjam idipaaru

Female : En machchanukku kannaththilae machcham irukkum
Avar maarbula naan kuththina kili pachai irukkum

Female : Kattaana kariya koondhal valarththirupaaru
Neenga kanni ponnu endru thappaa nenaikkakoodaathu
Kayilae irumbu valaiyam pottrupaaru
Yaarum kaakkaa valippu endru atha karuthakkodaatha

Female : Oorrellaam rompa naala thedi paarkiraen
Intha hotellalilum suthi suthi aadi paarkkiraen
Aarellaam irupaarunnu odi paarkiraen
Avara kandupidikka kaiya pidichchu naadi paarkkiraen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் மச்சானுக்கு கன்னத்திலே மச்சம் இருக்கும்
அவர் மார்புல நான் குத்தின கிளிப் பச்சை இருக்கும்

பெண் : அச்சடிச்ச சிலைய போல இருப்பாரு
மத்த ஆம்பளையும் மயங்கும்படி சிரிப்பாரு
பட்டணத்து வீதியிலே பாத்தீங்களா
அவர பாத்தவங்க விவரம் சொல்ல மாட்டீங்களா

பெண் : என் மச்சானுக்கு கன்னத்திலே மச்சம் இருக்கும்
அவர் மார்புல நான் குத்தின கிளிப் பச்சை இருக்கும்

பெண் : என் அத்தப்புள்ள கப்புசாமி முத்து இருப்பான்
பருவ அழகு கொஞ்சம் ஒத்த மூக்கு குத்தியிருக்கும்
சித்தானை குட்டியப் போல நடப்பாரு
இளஞ்சிட்டுகள கண்டா கொஞ்சம் இடிப்பாரு

பெண் : என் மச்சானுக்கு கன்னத்திலே மச்சம் இருக்கும்
அவர் மார்புல நான் குத்தின கிளிப் பச்சை இருக்கும்

பெண் : கட்டான கரிய கூந்தல் வளர்த்திருப்பாரு
நீங்க கன்னிப் பொண்ணு என்று தப்பா நெனைக்ககூடாது
கையிலே இரும்பு வளையம் போட்டிருப்பாரு
யாரும் காக்கா வலிப்பு என்று அதக் கருதக்கூடாது…….

பெண் : ஊரெல்லாம் ரொம்ப நாளா தேடிப் பார்க்கிறேன்
இந்த ஹோட்டலிலும் சுத்தி சுத்தி ஆடிப் பார்க்கிறேன்
ஆறெல்லாம் இருப்பார்ன்னு ஓடிப் பார்க்கிறேன்
அவர கண்டுபிடிக்க கையப் புடிச்சு நாடி பார்க்கிறேன்…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here