Singer : S. Janaki
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Hae en ooru mysoreu
Eppodum en vayasu padhinaaru
En ooru mysoreu
Eppodum en vayasu padhinaaru
Naan pesum mozhi padhinaalu
Naan pogum paadhai oru varalaaru
Female : Aathukullae naan pudichen
Rendu kendai meenu
Azhagaga paarkanum naa kannai paaru
Thopukkul naan parichen
Rendu ilaneeru adhai
Suvaiyaaga paarkanum naa munnae paaru
Female : En ooru mysoreu
Eppodum en vayasu padhinaaru
Naan pesum mozhi padhinaalu
Naan pogum paadhai oru varalaaru
Female : Thoothukudi muthaaga pallu
Malai thaenaaga suvaiyaana sollu
Saathukkudi pazhamaaga kannam
Adhu saaraaga villaiyadi innum
Female : Saelai kadai bommaigalai kandu
Manam thindaadum vaalibargal undu
Saelai kadai bommaigalai kandu
Manam thindaadum vaalibargal undu
Paal vadiyum vaazhai ilanthandu
Idhai paarthuvittaa ennagum indru
Female : En ooru hahaan mysoreu
Eppodum en vayasu padhinaaru
Naan pesum mozhi padhinaalu
Naan pogum paadhai oru varalaaru
Female : Ilachi pochi unavai konjam ethiko
Udambu peruthu pochu
Uppai konjam korachukoo
Vaetti viludhu kudiyai konjam niruthikoo
Idhu vidiyamma mundhanaiyai thiruthikoo
Female : Ilachi pochi unavai konjam ethiko
Udambu peruthu pochu
Uppai konjam korachukoo..ada ada
Vaetti viludhu kudiyai konjam niruthikoo
Idhu vidiyamma mundhanaiyai thiruthikoo
Female : Sattam vandha sandhukkula nulainjiko
Perum sabaiyil yeri nyayamaga pesikoo
Sattam vandha sandhukkula nulainjiko
Perum sabaiyil yeri nyayamaga pesikoo
Thittam pottu padhaviyilae yeriko
Yarum sindhikaama kadaisi varai parthukoo
Female : En ooru hahaan mysoreu
Eppodum en vayasu padhinaaru
Naan pesum mozhi padhinaalu
Naan pogum paadhai oru varalaaru
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஹே என் ஊரு மைசூரு
எப்போதும் என் வயசு பதினாறு
என் ஊரு மைசூரு
எப்போதும் என் வயசு பதினாறு
நான் பேசும் மொழி பதினாறு
நான் போகும் பாதை ஒரு வரலாறு
பெண் : ஆத்துக்குள்ளே நான் புடிச்சேன்
ரெண்டு கெண்டை மீனு
அழகப் பார்க்கணும்னா கண்ணைப்பாரு
தோப்புக்குள் நான் பறிச்சேன்
ரெண்டு இளநீரு அதைச்
சுவையாகப் பார்க்கணும்நா முன்னே பாரு
பெண் : என் ஊரு மைசூரு
எப்போதும் என் வயசு பதினாறு
நான் பேசும் மொழி பதினாறு
நான் போகும் பாதை ஒரு வரலாறு
பெண் : தூத்துக்குடி முத்தாகப் பல்லு
மலைத் தேனான சுவையான சொல்லு
சாத்துக்குடிப் பழமாகக் கன்னம்
அது சாறாக வில்லையடி இன்னும்
பெண் : சேலைக்கடை பொம்மைகளைக் கண்டு
மனம் திண்டாடும் வாலிபர்கள் உண்டு
சேலைக்கடை பொம்மைகளைக் கண்டு
மனம் திண்டாடும் வாலிபர்கள் உண்டு
பால் வடியும் வாழை இளந்தண்டு
இதைப் பார்த்துவிட்டா என்னாகும் இன்று
பெண் : என் ஊரு மைசூரு
எப்போதும் என் வயசு பதினாறு
நான் பேசும் மொழி பதினாறு
நான் போகும் பாதை ஒரு வரலாறு
பெண் : இளச்சி போச்சி உணவை கொஞ்சம் ஏத்திக்கோ
உடம்பு பெருத்துப் போச்சு
உப்பை கொஞ்சம் குறைச்சிக்கோ
வேட்டி விழுது குடியை கொஞ்சம் நிறுத்திக்கோ
இது வீதியம்மா முந்தானையை திருத்திக்கோ
பெண் : இளச்சி போச்சி உணவை கொஞ்சம் ஏத்திக்கோ
உடம்பு பெருத்துப் போச்சு
உப்பை கொஞ்சம் குறைச்சிக்கோ
வேட்டி விழுது குடியை கொஞ்சம் நிறுத்திக்கோ
இது வீதியம்மா முந்தானையை திருத்திக்கோ
பெண் : சட்டம் வந்தா சந்துக்குள்ளே நுழைஞ்சிக்கோ
பெரும் சபையிலே நியாயமா பேச்சிக்கோ
திட்டம் போட்டு பதவியிலே ஏறிக்கோ
யாரும் சிந்திக்காம கடைசி வர பார்த்துக்கோ
பெண் : என் ஊரு மைசூரு
எப்போதும் என் வயசு பதினாறு
நான் பேசும் மொழி பதினாறு
நான் போகும் பாதை ஒரு வரலாறு