Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male : Anaamikka anaamikka anaamikka
Female : En peyarae enakku maranthu pona
Indha vanantharathil ennai peyar solli
Azhaithathu yaar neeya… neeya

Female : Ennai oru minnal keettru
Endrallava ninaithirunthen
Nee eppadi adhil niranthira paai mudainthai
Chorus : …………………….

Male : Enadhu yaathiraiyil ella manidhargalum
Ellai karkalaai irukka
Nee mattum enakku paadhai aaginaai eppadi

Female : Paruva kaalangalaal pusttikkadha
En thottam
Un paarvaigalaal pushtithathae

Male : Thee vizhunthaalum urugaadha en nenju
Oru poo vizhundha podhu urugiyadhae
Chorus : …………………………..

Female : Indha kaadhal megam thaan
Manamennum erimalaiyil
Mazhai sindhi mazhai sindhi adhil
Ullaasa vanangalai urpathi seiyum

Male : Idhaya rojaa sediyil
Indha ottrai poo poothu vitaal
Aththanai mutkalum udhirnthu pogindrana

Female : Vaalibam yenthi paarkkum
Thiruvodum idhu thaan
Male : Vaalibam soodi paarkkum
Kreedamum idhu than
Chorus : …………………………..

Male : Mudhalil sapthangalukku
Artham sariyaai vilagavillai
Female : Ippodho maunathirukkum kooda
Urai ezhudha mudigirathu

Male : En kangal unnidam kaadhal pitchai
Ketkkum amudha surabigal
Amudha surabhigal pattini kidakalaama
Un paarvaiyai pichaiyidu hmmm pichaiyidu

Chorus : …………………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அனாமிகா அனாமிகா அனாமிகா
பெண் : என் பெயரே எனக்கு மறந்து போன
வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி
அழைத்தது யார் நீயா நீயா….

பெண் : என்னை ஒரு மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்
நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய்
குழு : லாலாலலலலலலலால்ல்லா….

ஆண் : எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும்
எல்லை கற்களாய் இருக்க
நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி

பெண் : பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத
என் தோட்டங்கள்
உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே…

ஆண் : தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு
ஒரு பூ விழுந்த போது உருகியதே
குழு : லாலாலலலலலலலால்ல்லா..ஆஆஆஆ..

பெண் : இந்த காதல் மேகம்தான்
மனமென்னும் எரிமலையை
மழை சிந்தி மழை சிந்தி அதில்
உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும்

ஆண் : இதய ரோஜாச் செடியில்
இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால்
அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன

பெண் : வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான்
ஆண் : வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான்
குழு : லாலாலலல லலலலால்ல்லா…….லாலாலாலா

ஆண் : முதலில் சப்தங்களுக்கு
அர்த்தம் சரியாய் விலகவில்லை
பெண் : இப்போதோ மௌனத்திற்கும் கூட
உரை எழுத முடிகிறது

ஆண் : என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை
கேட்கும் அமுதசுரபிகள்
அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா
உன் பார்வையை பிச்சையிடு…பிச்சையிடு
குழு : லாலாலலலலலலலால்ல்லா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here