Singers : Nanjamma and Velmurugan

Music by : GKV

Lyrics by : Siva Prakasam S

Female : ……………….

Female : Chinna kada veedhiyila
Silundhu vandha seval
Silundhu vandha sevalnu
Yetrukondadhaaro
Yetrukondadhaaro

Female : …………………

Female : Pasvaada raayanukku
Nenthuvitta seval
Nenthuvitta seval

Female : Sevalu pona idam
Enaku theriyalu
Enaku theriyalu

Male : Mala paadha ara koottam
Mazha megam vizhi engum
Uyir oorum udal koorum
Vizhi podhae mala payanam

Male : Kuyil koovum sevigal thedum
Malai oram manam pogum
Kan aattum dhisaigal ellaam
Kanneeraa panimoottam

Male : Pachai neram pachi koottam
Paakkum bodhae kulira ootum
Mela pogum sooriyanum
Ullukkulla vara vazhiya kekkum

Male : Kannaadi karkandaaga
Mazhai thooral inippa koottum
Pul kooda thuliya yendhi
Kannukku virunthaakkum

Male : Silvandu saththamellaam
Sillarai pol vizhunthodum
Moththama paakum bodhae
Sokka vaikkum

Female : ………………….

Female : Chinna kadai veedhiyila
Silundhu vandha seval
Kovapattu pona seval
Koyamu penchaavaa
Koyamu penchasvaa

Female : ……………..

Female : Komootti vaasalilae
Kokkaruththa seval
Kokkaruththa sevalnu
Kollai kondadhaaro
Kollai kondadhaaro
Kollai kondadhaaro

Male : Hae…ae….ae….
Mala kaathu mozhi pesa
Manamellaam adhu veesa
Poonjolai thala aatta
Poondheni koothaada
Isai ellaam ingae dhaan
Uruvaagum uru maarum
Ragangal thaalangal
Thannaalae pirandhodum

Male : Ingae vaazhum namma koottam
Ingaeyae saaga ellaam yengum
Bhoomi ellaam pookkal vannam
Alli vilaiyada konjam ennum

Male : Ellaamae payanam dhaanae
Inbangal thunbangal
Oru podhum niruththaadhae
Nee unna thedu
Vidai illa vidaiya thedi
Malapaadha unna thedi
Vandhomae varuvomae
Vidhiya thedi

Female :………………..

Female : En seval pona idam
Enaku theriyalae
Enaku theriyalae

பாடகர்கள் : நஞ்சம்மா மற்றும் வேல்முருகன்

இசை அமைப்பாளர் : ஜிகேவி

பாடல் ஆசிரியர் : சிவப்பிரகாசம் எஸ்

பெண் : …………………..

பெண் : சின்ன கடை வீதியில
சிலுந்து வந்த சேவல்
சிலுந்து வந்த சேவல்னு
ஏற்றுக்கொண்டாதாரோ
ஏற்றுக்கொண்டாதாரோ

பெண் : ……………………….

பெண் : பாவாட ராயனுக்கு
நேந்துவிட்ட சேவல்
நேந்துவிட்ட சேவல்

பெண் : சேவலு போன இடம்
எனக்கு தெரியாது
எனக்கு தெரியாது

ஆண் : மல பாத மர கூட்டம்
மழ மேகம் விழி எங்கும்
உயிர் ஊரும் உடல் கூறும்
விழி போதே மலை பயணம்

ஆண் : குயில் கூவும் செவிகள் தேடும்
மலை ஓரம் மனம் போகும்
கண் ஆட்டும் திசைகள் எல்லாம்
கண்ணீரா பனிமூட்டம்

ஆண் : பச்சை நேரம் பச்சி கூட்டம்
பாக்கும் போதே குளிர ஊட்டும்
மேல போகும் சூரியனும்
உள்ளுக்குள்ள வர வழிய கேக்கும்

ஆண் : கண்ணாடி கற்கண்டாக
மழை தூறல் இனிப்ப கூட்டும்
புல் கூட துளிய ஏந்தி
கண்ணுக்கு விருந்தாக்கும்

ஆண் : சில்வண்டு சத்தமெல்லாம்
சில்லறை போல் விழுந்தோடும்
மொத்தமா பாக்கும் போதே
சொக்க வைக்கும்

பெண் : ………………….

பெண் : சின்ன கடை வீதியில
சிலுந்து வந்த சேவல்
கோவப்பட்டு போன சேவல்
கொயமு பெஞ்சாவா
கொயமு பெஞ்சாவா

பெண் : ……………………….

பெண் : கோமூட்டி வாசலிலே
கொக்கருத்த சேவல்
கொக்கருத்த சேவல்னு
கொள்ளை கொண்டதாரோ
கொள்ளை கொண்டதாரோ

ஆண் : ஹே ..ஏ ..ஏ ..
மல காத்து மொழி பேச
மனமெல்லாம் அது வீச
பூஞ்சோலை தல ஆட்ட
பூந்தேணி கூத்தாட
இசை எல்லாம் இங்கே தான்
உருவாகும் உரு மாறும்
ராகங்கள் தாளங்கள்
தன்னாலே பிறந்தோடும்

ஆண் : இங்கே வாழும் நம்ம கூட்டம்
இங்கேயே சாக எல்லாம் ஏங்கும்
பூமி எல்லாம் பூக்கள் வண்ணம்
அள்ளி விளையாட கொஞ்சம் எண்ணும்

ஆண் : எல்லாமே பயணம் தானே
இன்பங்கள் துன்பங்கள்
ஒரு போதும் நிறுத்தாதே
நீ உன்ன தேடு
விடை இல்லா விடைய தேடி
மலபாத உன்ன தேடி
வந்தோமே வருவோமே
விதிய தேடி

பெண் : …………………..

பெண் : என் சேவல் போன இடம்
எனக்கு தெரியலே
எனக்கு தெரியலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here