Singer : S. Janaki

Music by : L. Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Female : En thalaivan varugiraan nerilae
Nalla ilamaiyenum kavithai koyil therilae
En thalaivan varugiraan nerilae
Nalla ilamaiyenum kavithai koyil therilae

Female : Pon pathiththa thegam
Adhil pongi varum mogam
Pon pathiththa thegam
Adhil pongi varum mogam

Female : Kannirendum paaduvathu
Ranjanai raagam sivaranjani raagam
Karthigaiyil piranthu varum anantha raagam

Female : En thalaivan varugiraan nerilae
Nalla ilamaiyenum kavithai koyil therilae

Chorus : …………….

Female : Kuththu vilakkettri nalla kolangalum theetti
Maththala melangalil mangalam kotti
Kuththu vilakkettri nalla kolangalum theetti
Maththala melangalil mangalam kotti

Female : Enai manavaraiyil nrkka vaiththaar aaraththi suttri
Pattu vanna selai palapalakkum maalai
Pattu vanna selai palapalakkum maalai
Kattikkondu naaniruppaen thirumana velai
Enai kaipidiththu sugam tharuvaar kannmani kaalai
Enai kaipidiththu sugam tharuvaar kannmani kaalai

Female : En thalaivan varugiraan nerilae
Nalla ilamaiyenum kavithai koyil therilae

Chorus : …………….

Female : ……………..

Female : Aadi maatha kaattru avan aasaiyulla oottru
Kodi kodi thantha pothum verillai maattru
Aadi maatha kaattru avan aasaiyulla oottru
Kodi kodi thantha pothum verillai maattru

Female : Naan komaganin kaaladiyil vilainthidum naattru
Kannazhagu kavithai avan kaaladiyo thaalam
Kannazhagu kavithai avan kaaladiyo thaalam

Female : Vennilavu saareduththu yaettri vaiththa dheepam
Antha venthanai naan manappathuthaan
Antha venthanai naan manappathuthaan
Dheivam thantha laabam

Female : En thalaivan varugiraan nerilae
Nalla ilamaiyenum kavithai koyil therilae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

பெண் : பொன் பதித்த தேகம் அதில்
பொங்கி வரும் மோகம்
பொன் பதித்த தேகம் அதில்
பொங்கி வரும் மோகம்

பெண் : கண்ணிரெண்டும் பாடுவது
ரஞ்சனி ராகம் சிவரஞ்சனி ராகம்
கார்த்திகையில் பிறந்து வரும் ஆனந்த ராகம்

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

குழு : ………………………….

பெண் : குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி
மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி
குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி
மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி

பெண் : எனை மணவறையில் நிற்க வைத்தார் ஆரத்தி சுற்றி
பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை
பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை
கட்டிக்கொண்டு நானிருப்பேன் திருமண வேளை
எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை…..
எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை…..

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

குழு : ………………………….

பெண் : ………………………

பெண் : ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று
கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று
ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று
கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று

பெண் : நான் கோமகனின் காலடியில் விளைந்திடும் நாற்று
கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம்
கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம்

பெண் : வெண்ணிலவு சாறெடுத்து ஏற்றி வைத்த தீபம்
அந்த வேந்தனை நான் மணப்பதுதான்
அந்த வேந்தனை நான் மணப்பதுதான்
தெய்வம் தந்த லாபம்……

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here