Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : En ullam azhagaana velliththirai

Female : En ullam azhagaana velliththirai
En ullam azhagaana velliththirai
Athil un vannamae ponnooviyam
Nizhalaadum padam endrum neeyallaavaa

Female : En ullam azhagaana velliththirai…ee….

Female : Kannaadu thirumaeni avan thanthathu
Nee kann vaiththu paaraamal thuyar kondathu
Kannaadu thirumaeni avan thanthathu
Nee kann vaiththu paaraamal thuyar kondathu

Female : Pon manjal poonthegam poo pondrathu
Pon manjal poonthegam poo pondrathu
Adhu poligindrathu unnai valam vanthathu
Adhu poligindrathu unnai valam vanthathu

Female : En ullam azhagaana velliththirai
Athil un vannamae ponnooviyam
Nizhalaadum padam endrum neeyallaavaa

Female : En ullam azhagaana velliththirai…ee….

Female : Idhamaana idhazh undu padam podavae
Dhinam isai koottum idai undu oli ketkavae
Idhamaana idhazh undu padam podavae
Dhinam isai koottum idai undu oli ketkavae

Female : En ullam azhagaana velliththirai
Athil un vannamae ponnooviyam
Nizhalaadum padam endrum neeyallaavaa

Female : En ullam azhagaana velliththirai…ee…

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை….ஈ….

பெண் : கண்ணாடித் திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்துப் பாராமல் துயர் கொண்டது
கண்ணாடித் திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்துப் பாராமல் துயர் கொண்டது

பெண் : பொன் மஞ்சள் பூந்தேகம் பூ போன்றது
பொன் மஞ்சள் பூந்தேகம் பூ போன்றது
அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது
அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை….ஈ….

பெண் : இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே

பெண் : கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா

பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை….ஈ….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here