Singers : T. M. Soundarajan and Tharapuram Sundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Malaikottai raajavin
Vamsathilae vandhavan ivan
Male : Hahahaha
Male : Kallikottai raajavukku
Pallikooda nanban ivan
Male : Hahahaha
Male : Parota rajaavukku parotta
Thatti thandhavan ivan
Male : Hahahaha
Male : Ingae ulla raajavukku
Englishupish solli thandhavan ivan
Male : Hahahaha

Male : En vesha porutham eppadi irukku
Vivaram solluda thambhi
Haha ha ha haa
En vesha porutham eppadi irukku
Vivaram solluda thambhi
Naan vaettiyai vutten soottukku vandhen
Nagarigathai nambhi nambhi
Vaettiyai vutten soottukku vandhen
Nagarigathai nambhi nambhi
Vesha porutham eppadi irukku
Vivaram solluda thambhi

Male : Sola kaatiloru bommai
Jodi saerthadha unnai
Aadai maariyadhu bashai maariyadhu
Paavam maaravillai annae

Male : Sola kaatiloru bommai
Jodi saerthadha unnai
Aadai maariyadhu bashai maariyadhu
Paavam maaravillai annae

Male : Maenattu aadaiyilae mogamidhu
Thennattu paaniyilae paavamidhu
Unnaalae naan adaintha kolamidhu
Komaali pottu varum vesham idhu
Thaiyathakka thaiyaa

Male : Vesha porutham eppadi irukku
Vivaram solluda thambhi

Male : Valli nadagathu vaedan
London veedhigalil odi
Maanai thediyathu paattu paadiyadhu
Pondra kolamidhu annae

Male : Aathoram naalu muzham vaetti katti
Kaathada poyivarum veeranukku
Naethoda nattupuram maariyadhu
Vaedhalam kottaiyilae yeriyadhu
Thaiyathakka thaiyaa

Male : Hahahaha

Male : Sreeramachandranukku latchumanan thambhiyalloo

Male : Arjunanukku dharmarajaa annanaai vandhadhalloo

Male : Thambhiyudaiyaan padaikanjaan enbathallaoo

Male : Thaai veru anaalum manam ondru pattadhallaoo

Male : Nalla nambarathu nenjam
Iraivan vaazhndhirukkum manjam

Male : Nenjam irandu adhil ennam ondru ena
Serndha pinbhu edhu panjam

Male : Nalla nambarathu nenjam
Iraivan vaazhndhirukkum manjam

Male : Nenjam irandu adhil ennam ondru ena
Serndha pinbhu edhu panjam

Both : Eppodhum nallavarukku nalla idam
Thappamal kondu varum deivam adhu
Munnorgal solli veitha vaarthai idhu
Ennaalum vaazhndhirukkum anbu idhu
Thaiyathakka thaiyaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் தாராபுரம் சுந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மலைக்கோட்டை ராஜாவின்
வம்சத்திலே வந்தவன் இவன்
ஆண் : ஹாஹாஹா
ஆண் : கள்ளிக்கோட்டை ராஜாவுக்கு
பள்ளிக்கூட நண்பன் இவன்
ஆண் : ஹாஹாஹா
ஆண் : பரோடா ராஜாவுக்கு பரோட்டா
தட்டித் தந்தவன் இவன்
ஆண் : ஹாஹாஹா
ஆண் : இங்கே உள்ளே ராஜாவுக்கு
இங்கிலீபிசு சொல்லித் தந்தவன் இவன்
ஆண் : ஹாஹாஹா

ஆண் : என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி
ஆண் : ஹாஹாஹா
என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி
நான் வேட்டியை வுட்டேன் சூட்டுக்கு வந்தேன்
நாகரீகத்தை நம்பி நம்பி………..
வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி

ஆண் : சோளக் காட்டிலொரு பொம்மை
ஜோடி சேர்த்ததா உன்னை
ஆடை மாறியது பாஷை மாறியது
பாவம் மாறவில்லை அண்ணே…….

ஆண் : சோளக் காட்டிலொரு பொம்மை
ஜோடி சேர்த்ததா உன்னை
ஆடை மாறியது பாஷை மாறியது
பாவம் மாறவில்லை அண்ணே…….

ஆண் : மேனாட்டு ஆடையிலே மோகமிது
தென்னாட்டு பாணியிலே பாவமிது
உன்னாலே நானடைந்த கோலமிது
கோமாளி போட்டு வரும் வேஷமிது
தையத்தக்கா தைய்யா………

ஆண் : என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி

ஆண் : வள்ளி நாடகத்து வேடன்
லண்டன் வீதிகளில் ஓடி
மானைத் தேடியது பாட்டுப் பாடியது
போன்ற கோலமிது அண்ணே….

ஆண் : ஆத்தோரம் நாலு முழம் வேட்டிக் கட்டிக்
காத்தாடப் போயிவரும் வீரனுக்கு
நேத்தோட நாட்டுப்புறம் மாறியது
வேதாளம் கோட்டையிலே ஏறியது….
தையத்தக்கா தைய்யா

ஆண் : ஹாஹாஹாஹா

ஆண் : ஸ்ரீராமசந்திரனுக்கு லட்சுமணன் தம்பியல்லவோ

ஆண் : அர்ச்சுனனுக்கு தருமராஜா அண்ணனாய் வந்ததல்லவோ

ஆண் : தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதல்லவோ

ஆண் : தாய் வேறு ஆனாலும் மனம் ஒன்று பட்டதல்லவோ

ஆண் : நல்ல நண்பரது நெஞ்சம்
இறைவன் வாழ்ந்திருக்கும் மஞ்சம்

ஆண் : நெஞ்சம் இரண்டு அதில் எண்ணம் ஒன்று என
சேர்ந்த பின்பு எதில் பஞ்சம்

ஆண் : நல்ல நண்பரது நெஞ்சம்
இறைவன் வாழ்ந்திருக்கும் மஞ்சம்

ஆண் : நெஞ்சம் இரண்டு அதில் எண்ணம் ஒன்று என
சேர்ந்த பின்பு எதில் பஞ்சம்

இருவர் : எப்போதும் நல்லவர்க்கு நல்ல இடம்
தப்பாமல் கொண்டு வரும் தெய்வமது
முன்னோர்கள் சொல்லி வைத்த வார்த்தை இது
எந்நாளும் வாழ்ந்திருக்கும் அன்பு இது……..
தையத்தக்கா தைய்யா……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here