Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu
Adharkkoru thunai vara neenda dhooram paranthathu
Manamellaam antha ninaivuthaan
Vizhiyellaam antha kanavuthaan

Male : Azhagu paarththu azhagu paarththu
Ezhuthi vaiththa ponmaanai
Anaiththavan naanthaanae ennodu indru
Aduththavan kondaanae thannodu

Male : Vizhigalil neeroda unarchchigal poraada
Vizhigalil neeroda unarchchigal poraada
Enakkillai oru koodu irunthenna uyirodu

Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu
Adharkkoru thunai vara neenda dhooram paranthathu
Manamellaam antha ninaivuthaan
Vizhiyellaam antha kanavuthaan

Male : Avalukkaaga avalukkaaga
Azhuvathenna nenjae nee
Thalaivithi kanneeril azhiyumaa andru
Vaguththathai nee maatra mudiyumaa

Male : Ularanthathu poonthottam adharkkillai neerottam
Ularanthathu poonthottam adharkkillai neerottam
Udhirnthathu arumpaathu kadanthathu thirumpaathu

Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu
Adharkkoru thunai vara neenda dhooram paranthathu
Manamellaam antha ninaivuthaan
Vizhiyellaam antha kanavuthaan

Male : Oorazhaiththu uravzhaiththu
Pesi vaiththa kalyaanam
Manjal mudi podaamal mudinthathae rendu
Manangalaum koodaamale pirnthathae

Male : Karaiyinil meenaaga thavippavan naanaaga
Karaiyinil meenaaga thavippavan naanaaga
Thalaivanain nizhalaaga kulamagam nee vaazhga

Male : Enakkoru manippuraa jodiyendru irunthathu
Adharkkoru thunai vara neenda dhooram paranthathu
Manamellaam antha ninaivuthaan
Vizhiyellaam antha kanavuthaan

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்….

ஆண் : அழகு பார்த்து அழகு பார்த்து
எழுதி வைத்த பொன்மானை
அணைத்தவன் நான்தானே என்னோடு இன்று
அடுத்தவன் கொண்டானே தன்னோடு

ஆண் : விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட
விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட
எனக்கில்லை ஒரு கூடு இருந்தென்ன உயிரோடு

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்….

ஆண் : அவளுக்காக அவளுக்காக
அழுவதென்ன நெஞ்சே நீ
தலைவிதி கண்ணீரில் அழியுமா அன்று
வகுத்ததை நீ மாற்ற முடியுமா

ஆண் : உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம்
உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம்
உதிர்ந்தது அரும்பாது கடந்தது திரும்பாது

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்….

ஆண் : ஊரழைத்து உறவழைத்து
பேசி வைத்த கல்யாணம்
மஞ்சள் முடி போடாமல் முடிந்ததே ரெண்டு
மனங்களும் கூடாமல் பிரிந்ததே

ஆண் : கரையினில் மீனாக தவிப்பவன் நானாக
கரையினில் மீனாக தவிப்பவன் நானாக
தலைவனின் நிழலாக குலமகள் நீ வாழ்க…..

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here