Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Yei enakku theriyum
Unakku puriyum yedho adhu
Ye adakka ninaithaal
Adhigam valarum yedho adhu yei
Enaku theriyum unakku puriyum yedho adhu
Adakka ninaithaal adhigam valarum yedho adhu

Female : Thattu pol oru maeniyilae saainthavudan
Paaindhu varum bodhai ennavoo
Pottu pol oru chinna malar
Thottavudan pongi varum saedhi ennavoo

Female : Nammai kaettu vandhadhillai
Naanum kelvi kettadhillai
Kaalam kootti vandhu sollum
Kangal kolam pottu kollum
Kaalam kootti vandhu sollum
Kangal kolam pottu kollum yei

Female : Enaku theriyum unakku puriyum yedho adhu
Adakka ninaithaal adhigam valarum yedho adhu

Female : Thanga gopuram aaduvadhai kaanavarum
Aadavarin ennam ennavoo
Chinna solaiyil minni varum
Sevvidhazhil thedi varum vannam ennavo

Female : Angae naeram paarpadhillai
Yaarum podhum enbadhillai
Ennam theerum pola thondrum
Aanaal thedi thedi paarkkum
Ennam theerum pola thondrum
Aanaal thedi thedi paarkkum yei

Female : Enaku theriyum unakku puriyum yedho adhu
Adakka ninaithaal adhigam valarum yedho adhu

Male : Humming…

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏய் எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது
அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது
ஏய் எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது
அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது

பெண் : தட்டுப் போலொரு மேனியிலே சாய்ந்தவுடன்
பாய்ந்து வரும் போதை என்னவோ
பொட்டுப் போலொரு சின்ன மலர்
தொட்டவுடன் பொங்கி வரும் சேதி என்னவோ

பெண் : நம்மைக் கேட்டு வந்ததில்லை
நாமும் கேள்வி கேட்டதில்லை
காலம் கூட்டி வந்து சொல்லும்
கண்கள் கோலம் போட்டுக் கொள்ளும்
காலம் கூட்டி வந்து சொல்லும்
கண்கள் கோலம் போட்டுக் கொள்ளும் ஏய்

பெண் : எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது
அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது

பெண் : தங்கக் கோபுரம் ஆடுவதைக் காணவரும்
ஆடவர் எண்ணம் என்னவோ
சின்னச் சோலையில் மின்னி வரும்
செவ்விதழில் தேடி வரும் வண்ணம் என்னவோ

பெண் : அங்கே நேரம் பார்ப்பதில்லை
யாரும் போதும் என்பதில்லை
எண்ணம் தீரும் போலத் தோன்றும்
ஆனால் தேடி தேடித் பார்க்கும்
எண்ணம் தீரும் போலத் தோன்றும்
ஆனால் தேடி தேடித் பார்க்கும் ஏய்

பெண் : எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது
அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது

ஆண் : …………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here