Singer : K. J. Yesudas

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Kannadasan

Male : Enathu vaazhkkai paathaiyil
Eriyum irandu dheepangal
Ennei illai ondrilae
Enna illai ondrilae

Male : Enathu vaazhkkai paathaiyil
Eriyum irandu dheepangal
Ennei illai ondrilae
Enna illai ondrilae

Male : Inikka marantha karumbaiyum
Manakka virumbum arumbaiyum
Enakku koduththa iraivanin
Kanakkai ninaiththu paarkkiraen

Male : Irandum irandum kolangal
Irandum irandum kolangal
Kodai vasantham irandu paruvangal

Male : Enathu vaazhkkai paathaiyil
Eriyum irandu dheepangal

Male : Iravil malarntha thamarai
Kadhirai kaana maranthathu
Pagalil malarantha alliyo
Nilavai kaana thudiththathu

Male : Kudumba vaazhkkai vedhanai
Paruva mazhaigal thavarum sodhanai

Male : Enathu vaazhkkai paathaiyil
Eriyum irandu dheepangal

Male : Manitha vaazhvin jaadhagam
Silarin vaazhvil saathagam
Edhuvum endrum maaralaam
Manathuthanae kaaranam

Male : Innum enna koorattum
Kavalai maranthu paravai paadattum

Male : Enathu vaazhkkai paathaiyil
Eriyum irandu dheepangal
Ennei illai ondrilae
Enna illai ondrilae

Male : Enathu vaazhkkai paathaiyil
Eriyum irandu dheepangal

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணை இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே…

ஆண் : எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணை இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே…

ஆண் : இனிக்க மறந்த கரும்பையும்
மணக்க விரும்பும் அரும்பையும்
எனக்கு கொடுத்த இறைவனின்
கணக்கை நினைத்து பார்க்கிறேன்

ஆண் : இரண்டும் இரண்டு கோலங்கள்
இரண்டும் இரண்டு கோலங்கள்
கோடை வசந்தம் இரண்டு பருவங்கள்

ஆண் : எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்

ஆண் : இரவில் மலர்ந்த தாமரை
கதிரைக் காண மறந்தது
பகலில் மலர்ந்த அல்லியோ
நிலவைக் காண துடித்தது

ஆண் : குடும்ப வாழ்க்கை வேதனை
பருவ மழைகள் தவறும் சோதனை

ஆண் : எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்

ஆண் : மனித வாழ்வின் ஜாதகம்
சிலரின் வாழ்வில் சாதகம்
எதுவும் என்றும் மாறலாம்
மனதுதானே காரணம்

ஆண் : இன்னும் என்ன கூறட்டும்
கவலை மறந்து பறவை பாடட்டும்

ஆண் : எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணை இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே..

ஆண் : எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here