Singer : K. J. Yesudas

Music by : L. Vaidyanathan

Male : Entha neramum nin maiyal yaeruthadee
Kuravallee….siru kalli…..
Entha neramum nin maiyal yaeruthadee

Male : Intha neraththilae malaivaaraththilae
Nadhiyoraththilae unai koodi
Nindran veera tamizh sollin saaraththilae
Manam mikka magizhchi kondaadi

Male : Kuzhal paaraththilae idhzheeraththilae
Mulaiyoraththilae anbu soodi
Nenjam aara thazhuvi amara nilai pettrathan
Payanai indru kaanbaen

Male : Entha neramum nin maiyal yaeruthadee
Kuravallee….siru kalli…..
Entha neramum nin maiyal yaeruthadee

Male : Vattangal ittum kulamagalaatha
Manang perunth theppaththai pola
Ninai vittu vittu pala leelaigal seithu
Nin meanithanai vidalindri

Male : Adi ettu dhisaiyum olirthidung kaalai
Iraviyai pondra mugaththaai
Muththam ittu pala muththamittu palamuththam
Ittunai saernthida vanthaen

Male : Entha neramum nin maiyal yaeruthadee
Kuravallee….siru kalli…..
Entha neramum nin maiyal yaeruthadee

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ……சிறு கள்ளி…..
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ

ஆண் : இந்த நேரத்திலே மலைவாரத்திலே
நதியோரத்திலே உனைக் கூடி
நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே
மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி

ஆண் : குழல் பாரத்திலே இதழீரத்திலே
முலையோரத்திலே அன்பு சூடி
நெஞ்சம் ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
பயனை இன்று காண்பேன்

ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ……சிறு கள்ளி…..
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ

ஆண் : வட்டங்கள் இட்டும் குளமகலாத
மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல
நினை விட்டு விட்டுப் பல லீலைகள் செய்து
நின் மேனிதனை விடலின்றி

ஆண் : அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
இரவியைப் போன்ற முகத்தாய்
முத்தம் இட்டுப் பல முத்தமிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன்

ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ……சிறு கள்ளி…..
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here