Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Naaraai naaraai sengaal naaraai
Panampadu panaiyin kizhanku pilanthanna
Pavala koorvaai sengaal naaraai…

Male : Endro pulavan paadiyathai
Naan indrae paadugiraen
Endro pulavan paadiyathai
Naan indrae paadugiraen

Male : En varumaiyai pokkum arasan yaaro
Avanai thedugiraen avanai thedugiraen

Male : Endro pulavan paadiyathai
Naan indrae paadugiraen

Male : Kalvi kangalai thiranthavan paarvai
Kurudaai ponathammaa
Paasamaai valarththa magalum
Enakke paaramaai aananthammaa

Male : Arivai thantha dheivam enkku
Aasthiyai tharavillai
Yaaridam ketpen yaaridam solven
Enkkey puriyavillai

Male : Endro pulavan paadiyathai
Naan indrae paadugiraen

Male : Yaenipadigal thaanae endrum
Yaeri povathillai
Adhil yaeri ponavar yaeniyai konjam
Paarppathil thavarillai

Male : Payirai koduppathu bhoomiyin dharmam
Adhai naan seigindraen
Boomiyin thaagam theerkka
Thanneer vendum ketkindraen
Vendum ketkindraen

Male : Endro pulavan paadiyathai
Naan indrae paadugiraen
Indrae paadugiraen

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்…….

ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்
என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்

ஆண் : என் வறுமையை போக்கும் அரசன் யாரோ
அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன்

ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்

ஆண் : கல்வி கண்களை திறந்தவன் பார்வை
குருடாய் போனதம்மா…..
பாசமாய் வளர்த்த மகளும்
எனக்கே பாரமாய் ஆனதம்மா….

ஆண் : அறிவை தந்த தெய்வம் எனக்கு
ஆஸ்தியை தரவில்லை
யாரிடம் கேட்பேன் யாரிடம் சொல்வேன்
எனக்கே புரியவில்லை

ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்

ஆண் : ஏணிப்படிகள் தானே என்றும்
ஏறி போவதில்லை
அதில் ஏறிப் போனவர் ஏணியை கொஞ்சம்
பார்ப்பதில் தவறில்லை

ஆண் : பயிரை கொடுப்பது பூமியின் தர்மம்
அதை நான் செய்கின்றேன்
பூமியின் தாகம் தீர்க்க
தண்ணீர் வேண்டும் கேட்கின்றேன்…….
வேண்டும் கேட்கின்றேன்…….

ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்
இன்றே பாடுகின்றேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here