Singer : T. R. Mahalingam

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Vindhiyam kumari idai
Vilangum thirunaadae ..ae…..ae….aaa…
Velendhum moovendhar aandirundha thennaadae
Engal dhraavida ponnaadae… ae…

Male : Engal dhraavida ponnaadae…
Kalai vaazhum thennaadae… ae..
Engal dhraavida ponnaadae…
Kalai vaazhum thennaadae…

Male : Iyal isai naadagam
Aram porul inbam
Vilangum senthamizh naadae
Engal dhraavida ponnaadae…
Kalai vaazhum thennaadae…

Male : Sariththiram paadum kaaveri
Ilam thalirkodi polae odugiraal
Sangam valarndha madhuraiyilae
Engal thamizh magal
Thamizh isai paadugiraal

Male : Vizhigalai polae kumariyin melae
Meen magal thulli aadugiraal
Vilaiyaadum vaigai azhiyaadha poigai
Dhisai dhorum isai paadum thaai naadae

Male : Engal dhraavida ponnaadae…
Kalai vaazhum thennaadae…

Male : Singala theevin kadarkkaraiyai
Engal senthamizh thozhar
Azhagu seidhaar
Egipthiyar naattin nadhikkaraiyil
Engal ilam thamizh veerar
Bhavani vandhaar

Male : Villavan chaeran paandiya naattin
Vel vizhi magalai manam mudiththaan
Vilaigindra selvam valargindra thangam
Dhisai dhorum isai paadum thaai naadae

Male : Engal dhraavida ponnaadae…
Kalai vaazhum thennaadae…
Iyal isai naadagam
Aram porul inbam
Vilangum senthamizh naadae
Engal dhraavida ponnaadae…
Kalai vaazhum thennaadae…

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : விந்தியம் குமரியிடை
விளங்கும் திருநாடே……ஏ….ஏ….ஆஅ….
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே….ஏ….

ஆண் : எங்கள் திராவிடப் பொன்னாடே……
கலை வாழும் தென்னாடே….ஏ….
எங்கள் திராவிடப் பொன்னாடே……
கலை வாழும் தென்னாடே

ஆண் : இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விலங்கும் செந்தமிழ் நாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே……
கலை வாழும் தென்னாடே

ஆண் : சரித்திரம் பாடும் காவேரி
இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்
சங்கம் வளர்த்த மதுரையிலே
எங்கள் தமிழ் மகள்
தமிழிசை பாடிகிறாள்

ஆண் : விழிகளைப் போலே குமரியின் மேலே
மீன் மகள் துள்ளி ஆடுகிறாள்
விளையாடும் வைகை அழியாத பொய்கை
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே

ஆண் : எங்கள் திராவிடப் பொன்னாடே……
கலை வாழும் தென்னாடே…..

ஆண் : சிங்களத் தீவின் கடற்கரையை
எங்கள் செந்தமிழ்த் தோழர்
அழகு செய்தார்
எகிப்திய நாட்டின் நதிக்கரையில்
எங்கள் இளந்தமிழ் வீரர்
பவனி வந்தார்

ஆண் : வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின்
வேல்விழி மகளை மணமுடித்தான்
விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே

ஆண் : எங்கள் திராவிடப் பொன்னாடே……
கலை வாழும் தென்னாடே
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விலங்கும் செந்தமிழ் நாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே……
கலை வாழும் தென்னாடே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here