Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : ……………….

Male : Engal kudumbam engum
Vilangum kaaviya poonjolai
Naam paasam ennum noolilai kondu
Kattiya poomaalai

Male : Engal kudumbam engum
Vilangum kaaviya poonjolai
Naam paasam ennum noolilai kondu
Kattiya poomaalai

Male : Oru kudumpathin kadhai idhu
Anbu karangalaal varainthathu
Oru kudumpathin kadhai idhu
Anbu karangalaal varainthathu

Male : Kaadu mlai medugalai kadanthapadi
Sellum pugaivandi
Kodum paniyil varum vazhiyil
Kaikaatti nalla pondaatti

Male : Hae vaazhkkaiyae neenda payanam
Thuninthu naam thodaranum

Male : Oru kudumpathin kadhai idhu
Anbu karangalaal varainthathu

Male : Anbae amuthae azhagae arivae
Naan oru kelvi ketkattumaa
Chorus : Kelunga sir
Male : Manithanukku eththanai kangal
Female : Irandu illai irupaththi irandu
Male : Eppadi sollu paarkkalaam
Male : Unga kann irandu nagakkan irupathu
Male : Very very good

Male : Pudhithaai therintha kural ondru sollu
Male : Naam iruvar namakku iruvar

Male : Ohho
Iniya kudumbam enbathu enna
Female : Irandukku mel eppothum vendaam
Male : Illae illae
Male : Iniya kudumbam palkalai kazhagam
Male : Very very good

Male : Oru kudumpathin kadhai idhu
Anbu karangalaal varainthathu

Chorus : ………………

Male : Thiru thirunnu karung kurangu
Muzhikkuthu paar
Nammai pazhikkuthu paar
Vaanaramum maanidanum
Aadhiyilae oru aadhiyilae
Vilangu pol vaazhum manithan
Thirunthinaal devanaam

Male : Intha kullanariyai polae ullavar yaaru
Male : Kooda irunthae kuzhi paripaaru
Male : Intha ottagasivingiyin uyaram yaarukku
Ullaththaalae uyarntha perukku
Male : Ohho ho
Intha yaanai vayiru yaarukku irukku
Male : Alavukku melae thinbavarukku

Male : Engal kudumbam engum
Vilangum kaaviya poonjolai
Naam paasam ennum noolilai kondu
Kattiya poomaalai

Male : Oru kudumpathin kadhai idhu
Anbu karangalaal varainthathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………

ஆண் : எங்கள் குடும்பம் எங்கும்
விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு
கட்டிய பூமாலை

ஆண் : எங்கள் குடும்பம் எங்கும்
விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு
கட்டிய பூமாலை

ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

ஆண் : காடு மலை மேடுகளை கடந்தபடி
செல்லும் புகைவண்டி
கொடும் பனியில் வரும் வழியில்
கைக்காட்டி நல்ல பெண்டாட்டி

ஆண் : ஹே வாழ்க்கையே நீண்ட பயணம்
துணிந்து நாம் தொடரணும்

ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

ஆண் : அன்பே …..அமுதே….அழகே…..அறிவே…..
நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா
குழு : கேளூங்க சார்
ஆண் : மனிதனுக்கு எத்தனை கண்கள்
பெண் : இரண்டு இல்லை இருபத்தி இரண்டு
ஆண் : எப்படி சொல்லு பார்க்கலாம்
ஆண் : உங்க கண் இரண்டு நகக்கண் இருபது
ஆண் : வெரி வெரி குட்

ஆண் : புதிதாய் தெரிந்த குறள் ஒன்று சொல்லு?
ஆண் : நாம் இருவர் நமக்கு இருவர்

ஆண் : ஓஹ்ஹோ
இனிய குடும்பம் என்பது என்ன?
பெண் : இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்
ஆண் : இல்லே இல்லே
ஆண் : இனிய குடும்பம் பல்கலை கழகம்
ஆண் : வெரி வெரி குட்

ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

குழு : ………………………….

ஆண் : திரு திருன்னு கருங்குரங்கு
முழிக்குது பார்
நம்மை பழிக்குதுபார்
வானரமும் மானிடனும்
ஆதியிலே ஒரு ஜாதியிலே
விலங்கு போல் வாழும் மனிதன்
திருந்தினால் தேவனாம்

ஆண் : இந்த குள்ளனரியை போலே உள்ளவர் யாரு
ஆண் : கூட இருந்தே குழி பறிப்பாரு
ஆண் : இந்த ஒட்டகசிவிங்கியின் உயரம் யாருக்கு
உள்ளத்தாலே உயர்ந்த பேருக்கு
ஆண் : ஓஹ்ஹோ ஹோ
இந்த யானை வயிறு யாருக்கு இருக்கு
ஆண் : அளவுக்குமேலே தின்பவருக்கு

ஆண் : எங்கள் குடும்பம் எங்கும்
விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு
கட்டிய பூமாலை

ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here