Singers : K. J. Yesudas and Manjari

Music by : Ilayaraja

Male : Engae irundhaai isaiyae…

Male : Engae irundhaai isaiyae
Nee engae irundhaai isaiyae
Uyirilaa unarvilaa manadhilaa madhiyilaa
Idhil edhuvo naanum ariyaen
Aanaal enakkul irukkiraai
Engirundho enakkul
Allida kuraiyaa ootraai surakkiraai

Male : Engae irundhaai isaiyae

Male : Kaatril kalappadhaal
Nee kaatrin vadivamaa sol
Oliyaai udhippadhaal
Nee oliyin uruvamaa sol
Uruvam yaedhum illaamal
Ulagai eerppaayae
Ulagin uyirgal unnidathil
Ullam izhappaarae

Male : Isaiyil mayangaa uyir yaedhu
Mazhaiyil vilaiyaa payir yaedhu
Idhu unakkum enakkum
Poorva jenma bandham thaan

Male : Engae irundhaai isaiyae
Nee engae irundhaai isaiyae

Female : Ethanai oorgalil
Naam inaindhu paadi chendrom
Ethanai sevigalil
Thaen virundhu padaithu chendrom
Paadhai illaa oorukkellaam
Paattaal vazhi pottom
Vaedhanai namakkul irundhaalum
Paattaal thuyar theerthom

Female : Isaiyai arindhida vizhi edharkku
Inam thaan kandida sevi irukku
Ingu paadum paadal
Pazhaiya ninaivai kooraadho

Female : Engae irundhaai isaiyae

Male : Nee engae irundhaai isaiyae

Female : Uyirilaa unarvilaa

Male : Manadhilaa madhiyilaa

Female : Idhil edhuvo naanum ariyaen
Aanaal enakkul irukkiraai

Male : Engirundho enakkul
Allida kuraiyaa ootraai surakkiraai

Both : Engae irundhaai…

Male : Nee engae irundhaai…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கே இருந்தாய் இசையே…….

ஆண் : எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே
உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா
இதில் எதுவோ நானும் அறியேன்
ஆனால் எனக்குள் இருக்கிறாய்
எங்கிருந்தோ எனக்குள்
அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய்

ஆண் : எங்கே இருந்தாய் இசையே

ஆண் : காற்றில் கலப்பதால்
நீ காற்றின் வடிவமா சொல்
ஒலியாய் உதிப்பதால்
நீ ஒலியின் உருவமா சொல்
உருவம் ஏதும் இல்லாமல்
உலகை ஈர்ப்பாயே
உலகின் உயிர்கள் உன்னிடத்தில்
உள்ளம் இழப்பாரே

ஆண் : இசையில் மயங்கா உயிர் ஏது
மழையில் விளையா பயிர் ஏது
இது உனக்கும் எனக்கும்
பூர்வ ஜென்ம பந்தம் தான்

ஆண் : எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே

பெண் : எத்தனை ஊர்களில்
நாம் இணைந்து பாடிச் சென்றோம்
எத்தனை செவிகளில்
தேன் விருந்து படைத்துச் சென்றோம்
பாதை இல்லா ஊருக்கெல்லாம்
பாட்டால் வழி போட்டோம்
வேதனை நமக்குள் இருந்தாலும்
பாட்டால் துயர் தீர்த்தோம்

பெண் : இசையை அறிந்திட விழி எதற்கு
இனம்தான் கண்டிட செவி இருக்கு
இங்கு பாடும் பாடல்
பழையை நினைவைக் கூறாதோ

பெண் : எங்கே இருந்தாய் இசையே

ஆண் : நீ எங்கே இருந்தாய் இசையே

பெண் : உயிரிலா உணர்விலா

ஆண் : மனதிலா மதியிலா

பெண் : இதில் எதுவோ நானும் அறியேன்
ஆனால் எனக்குள் இருக்கிறாய்

ஆண் : எங்கிருந்தோ எனக்குள்
அள்ளிடக் குறையா
ஊற்றாய் சுரக்கிறாய்

இருவர் : எங்கே இருந்தாய்…

ஆண் : நீ எங்கே இருந்தாய்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here