Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Engengo ullasa oorvalam
Sellum vennila
Indru endhendha oorilae thiruvizha

Female : Unnai kalyaana penendru sollavaa
Azhagu kannadi un maeni allavaa
Unnai kalyaana penendru sollavaa
Azhagu kannadi un maeni allavaa
Mannukku nee thandha paavadai ondralla
Pennukkum tharuvaaya

Female : Engengo ullasa oorvalam
Sellum vennila
Indru endhendha oorilae thiruvizha

Female : Muthu pallaakku yaar thandha vaaganam
Velli vinmeengal yaar thandha sedhanam
Muthu pallaakku yaar thandha vaaganam
Velli vinmeengal yaar thandha sedhanam
Oorukku sollamal kalyanam aanadhae
Yaar andha maapillaiyoo

Female : Engengo ullasa oorvalam
Sellum vennila
Indru endhendha oorilae thiruvizha

Female : Iravu vaanathil varugindra pennadi
Pagal nerathil un velai ennadi
Iravu vaanathil varugindra pennadi
Pagal nerathil un velai ennadi
Yen endru kelamal enakkaga solladi
Naanum pennallavoo

Female : Engengo ullasa oorvalam
Sellum vennila
Indru endhendha oorilae thiruvizha

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம்
செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா

பெண் : உன்னை கல்யாணப் பெண்ணென்று சொல்லவா
அழகுக் கண்ணாடி உன் மேனி அல்லவா
உன்னை கல்யாணப் பெண்ணென்று சொல்லவா
அழகுக் கண்ணாடி உன் மேனி அல்லவா
மண்ணுக்கு நீ தந்த பாவாடை ஒன்றல்ல
பெண்ணுக்கும் தருவாயா…….!

பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம்
செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா

பெண் : முத்துப் பல்லாக்கு யார் தந்த வாகனம்
வெள்ளி விண்மீன்கள் யார் தந்த சீதனம்
முத்துப் பல்லாக்கு யார் தந்த வாகனம்
வெள்ளி விண்மீன்கள் யார் தந்த சீதனம்
ஊருக்குச் சொல்லாமல் கல்யாணம் ஆனதே
யார் அந்த மாப்பிளையோ……?

பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம்
செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா

பெண் : இரவு வானத்தில் வருகின்ற பெண்ணடி
பகல் நேரத்தில் உன் வேலை என்னடி
இரவு வானத்தில் வருகின்ற பெண்ணடி
பகல் நேரத்தில் உன் வேலை என்னடி
ஏனென்று கேளாமல் எனக்காகச் சொல்லடி
நானும் பெண்ணல்லவோ……….!

பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம்
செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here