Singer : T. M. Soundarajan

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Bharathi Dasan

Male : Engengu kaaninum sakthiyada..aa..aa

Male : Thambhi ezhu kadal aval vannamada
Angu thangum veliyinir kodiyandam
Andha thaaiyin kai pandhena oodumada

Male : Engengu kaaninum sakthiyada..

Male : Gangulil ezhu mugilinamum
Koodi garchanai seivadhu kandathundoo
Gangulil ezhu mugilinamum
Koodi garchanai seivadhu kandathundoo
Andha mangai nagaitha oliyenalaam..aa…aa..

Male : Andha mangai nagaitha oliyenalaam…
Aval mangala nagaiyangu minnudhada

Male : Kaalai oruvan kavisuvaiyai
Karai kaana ninaitha muzhu ninaippil..aa.aa..
Haa..aa.. hoo ..oo..haa..aaa
Kaalai oruvan kavisuvaiyai
Karai kaana ninaitha muzhu ninaippil..
Annai tholasainthangae nadam purivaal
Annai tholasainthangae nadam purivaal
Avan thollarivaalar thiram peruvaan
Engengu kaaninum sakthiyada
Chorus : Sakthiyada

Male : Vaalai suzhattrum visaiyinilae
Indha vaiya muzhuvadhum thundu seiven
Oru vaalai suzhattrum visaiyinilae
Indha vaiya muzhuvadhum thundu seiven
Ena neela idai yindri nee ninaithaal
Annai naer paduvaal undhan thozhinilae
Naer paduvaal undhan thozhinilae
Engengu kaaninum sakthiyada
Chorus : Sakthiyada

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர்  : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் ஆசிரியர் : பாரதி தாசன்

ஆண் : எங்கெங்கு காணினும் சக்தியடா…

ஆண் : தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!
அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம்
அந்த தாயின் கைப்பந்தென ஓடுமடா

ஆண் : எங்கெங்கு காணினும் சக்தியடா…

ஆண் : கங்குலில் ஏழு முகிலினமும்
கூடி கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?
கங்குலில் ஏழு முகிலினமும்
கூடி கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?
அந்த மங்கை நகைத்த ஒலியெனலாம் ..ஆஅ…

ஆண் : அந்த மங்கை நகைத்த ஒலியெனலாம் ..
அவள் மந்த நகையங்கு மின்னுதடா!

ஆண் : காளை ஒருவன் கவிச்சுவையைக்
கரை காண நினைத்த முழு நினைப்பில் ..ஆ..ஆஅ..
ஹா..ஆ..ஹோ..ஓ..ஹா…ஆ..
காளை ஒருவன் கவிச்சுவையைக்
கரை காண நினைத்த முழு நினைப்பில் ..
அன்னை தோளசைத்தங்கே நடம் புரிவாள்
அன்னை தோளசைத்தங்கே நடம் புரிவாள்
அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான்…
எங்கெங்கு காணினும் சக்தியடா..
குழு : சக்தியடா

ஆண் : வாளைச் சுழற்றும் விசையினிலே
இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்
ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே
இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்
என நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர் படுவாள் உந்தன் தோளினிலே…….!
எங்கெங்கு காணினும் சக்தியடா …
குழு : சக்தியடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here