Singer : Sriram Parthasarathy

Music by : Justin Prabhakaran

Female : Aaararo…aaararo…aaararo…

Chorus : Ooooo..ooooo..ohoooo..oooo

Male : Engeyo pogum
Megangal polae
Payanangal povom
Intha boomi meethilae

Male : Ini enna nerum
Vaazhkaiku inghae
Vidai solvaar yaaro
Iru jeevan yenguthae

Male : Veyilukku nizhalaaga
Mazhai peithal kudaiyaaga
Yaar vanthu nammai servaaro

Chorus : Thol sainthu kolla
Oru thunai endru solla
Intha bantham mattum
Pakkam ullathae…

Chorus : Ethirpaarppu illa
Siru yemaatram illa
Oru payanam ponaal
Deivam ullathae

Male : Engeyo pogum
Megangal polae
Payanangal povom
Intha boomi meethilae

Female : {Aaararo…Male : Aaararo…} (2)

Male : Ullangkaal regai pola
Ottiyae vaazhum intha
Uravukku aayul ennavo…

Male : Kallukkul sirpam pola
Kannukkul theppam pola
Natpukkul karpam ullatho

Male : Kadavulgal boomikku
Varukindra oru thethi
Marakkaamal kelungal
Ithai patri oru sethi

Chorus : Nilai illa vaazhvil
Ethu nilaiyaanathendru
Ada yaar thaan ingae
Nyayam solvaaro

Chorus : Kaanal neer polae
Dhinam kalainthodum vaazhvil
Verum natpai kondu
Vaazhvai velvaaro

Male : Engeyo pogum
Megangal polae
Payanangal povom
Intha boomi meethilae

Chorus : Oooo..oooo..ooo

Male : Yaarodu yaarum ingae
Thunai poga nerum bothu
Undaakum uravum ithu thaanae

Male : Ezhuthatha vithigal endru
Evar vandhu solvaar indru
Ithu enna nizhala nijamthaanae

Male : Kanneero punnagaiyo
Ellamae sari paathi
Yaar solli thanthaaro
Azhagaana puthu neethi

Male : Oru kodi sontham
Athil pala kodi bantham
Ivai ellam ingae
Poiyaai ponathae

Male : Ethu vantha pothum
Nam natpondrae pothum
Ena kangal moodi
Payanam poguthae

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : ஆராரோ
ஆராரோ ஆராரோ

குழு : ஓஓஓஓ…..
ஓஹோ ஓ

ஆண் : எங்கேயோ
போகும் மேகங்கள்
போலே பயணங்கள்
போவோம் இந்த பூமி
மீதிலே

ஆண் : இனி என்ன
நேரும் வாழ்க்கைக்கு
இங்கே விடை சொல்வார்
யாரோ இரு ஜீவன் ஏங்குதே

ஆண் : வெயிலுக்கு நிழலாக
மழை பெய்தால் குடையாக
யார் வந்து நம்மை சேர்வாரோ

குழு : தோள் சாய்ந்து
கொள்ள ஒரு துணை
என்று சொல்ல இந்த
பந்தம் மட்டும் பக்கம்
உள்ளதே

குழு : எதிர்பார்ப்பு இல்ல
சிறு ஏமாற்றம் இல்ல
ஒரு பயணம் போனால்
தெய்வம் உள்ளதே

ஆண் : எங்கேயோ
போகும் மேகங்கள்
போலே பயணங்கள்
போவோம் இந்த பூமி
மீதிலே

பெண் : { ஆராரோ
ஆண் : ஆராரோ } (2)

ஆண் : உள்ளங்கால்
ரேகை போல ஒட்டியே
வாழும் இந்த உறவுக்கு
ஆயுள் என்னவோ

ஆண் : கல்லுக்குள் சிற்பம்
போல கண்ணுக்குள் தெப்பம்
போல நட்புக்குள் கர்ப்பம்
உள்ளதோ

ஆண் : கடவுள்கள் பூமிக்கு
வருகின்ற ஒரு தேதி
மறக்காமல் கேளுங்கள்
இதை பற்றி ஒரு சேதி

குழு : நிலை இல்லா வாழ்வில்
எது நிலையானதென்று
அட யார் தான் இங்கே
நியாயம் சொல்வாரோ

குழு : கானல் நீர் போலே
தினம் கலைந்தோடும்
வாழ்வில் வெறும் நட்பை
கொண்டு வாழ்வை வெல்வாரோ

ஆண் : எங்கேயோ
போகும் மேகங்கள்
போலே பயணங்கள்
போவோம் இந்த பூமி
மீதிலே

குழு : ஓஓஓஓ…..

ஆண் : யாரோடு யாரும்
இங்கே துணை போக
நேரும் போது உண்டாகும்
உறவும் இது தானே

ஆண் : எழுதாத விதிகள்
என்று எவர் வந்து சொல்வார்
இன்று இது என்ன நிழலா
நிஜம்தானே

ஆண் : கண்ணீரோ
புன்னகையோ எல்லாமே
சரி பாதி யார் சொல்லி
தந்தாரோ அழகான புது
நீதி

ஆண் : ஒரு கோடி
சொந்தம் அதில் பல
கோடி பந்தம் இவை
எல்லாம் இங்கே
பொய்யாய் போனதே

ஆண் : எது வந்த போதும்
நம் நட்பொன்றே போதும்
என கண்கள் மூடி பயணம்
போகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here