Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Enna mudhalaali sowkkiyamaa
Ungal irumbu pettiyum sowkkiyamaa
Enna mudhalaali sowkkiyamaa
Ungal irumbu pettiyum sowkkiyamaa

Female : Yaarenna aanaalumthaan mattum vaazhgindra
Aiyyaavin rajangam sowkkiyamaa
Yaarenna aanaalumthaan mattum vaazhgindra
Aiyyaavin raajangam sowkkiyamaa

Female : Enna mudhalaali sowkkiyamaa
Sowkkiyamaa sowkkiyamaa

Female : Paalundu thaenundu panneeril neeraadi
Carrerum thirumaeni sowkkiyamaa
Paalundu thaenundu panneeril neeraadi
Carrerum thirumaeni sowkkiyamaa

Female : Ponnenna mannenna
Selvangal ennenna
Ellaamum ippothu sowkkiyamaa
Ponnenna mannenna
Selvangal ennenna
Ellaamum ippothu sowkkiyamaa

Female : Kattaatha pattukkal kattaani muththukkal
Paattaali soththukkal sowkkiyamaa
Parama sowkkiyamaa….sowkkiyamaa

Female : Enna mudhalaali sowkkiyamaa
Ungal irumbu pettiyum sowkkiyamaa
Yaarenna aanaalumthaan mattum vaazhgindra
Aiyyaavin raajangam sowkkiyamaa

Female : Sattangal kaanaatha thittangal podungal
Kottungal melam mudhalaali
Pattangal ponaadai paarattum poomaalai
Yaeraalam yaeraalaam mudhlaali
Naalaagi ponaalum vaazhaatha ullangal
Maaraamal pogaathu muthalaali
Maaraamal pogaathu muthalaali

Female : Enna mudhalaali sowkkiyamaa
Ungal irumbu pettiyum sowkkiyamaa
Yaarenna aanaalumthaan mattum vaazhgindra
Aiyyaavin raajangam sowkkiyamaa

Female : Enna mudhalaali sowkkiyamaa
Sowkkiyamaa sowkkiyamaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா
என்ன முதலாளி சௌக்கியமா
உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா

பெண் : யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற
ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா
யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற
ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா

பெண் : பாலுண்டு தேனுண்டு பன்னீரில் நீராடி
காரேறும் திருமேனி சௌக்கியமா
பாலுண்டு தேனுண்டு பன்னீரில் நீராடி
காரேறும் திருமேனி சௌக்கியமா

பெண் : பொன்னென்ன மண்ணெண்ன
செல்வங்கள் என்னென்ன
எல்லாமும் இப்போது சௌக்கியமா
பொன்னென்ன மண்ணெண்ன
செல்வங்கள் என்னென்ன
எல்லாமும் இப்போது சௌக்கியமா

பெண் : கட்டாத பட்டுக்கள் கட்டாணி முத்துக்கள்
பாட்டாளி சொத்துக்கள் சௌக்கியமா
பரம சௌக்கியமா……..சௌக்கியமா…..

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா
யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற
ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா

பெண் : சட்டங்கள் காணாத திட்டங்கள் போடுங்கள்
கொட்டுங்கள் மேளம் முதலாளி
பட்டங்கள் பொன்னாடை பாராட்டு பூமாலை
ஏராளம் ஏராளம் முதலாளி
நாளாகிப் போனாலும் வாழாத உள்ளங்கள்
மாறாமல் போகாது முதலாளி……..
மாறாமல் போகாது முதலாளி……..

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா
யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற
ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here