Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Chorus : Hoiiiiiiiiii…..yaa….

Female : Enna paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..

Female : Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru

Female : Ettu dhisai paakkaiyilum
Entha vazhi pogaiyilum
Engaeyum un paechchu
Chorus : Aa…..hoi hoi

Female : Manjal veyil maalaiyilum
Meththaiyidum velaiyilum
Ennangal soodaachchu
Chorus : Aa….hoi hoi

Female : Nanjai nilam naan vaazhaththaan
Needhaanae neer maegam
Chorus : Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa

Female : Thooral podu ippothuthaan
Thottam pookkum appothuthaan
Chorus : Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa

Male : Aasai theera tholai saera
Paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..

Female : Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru

Chorus : ……………..

Female : Nalla manam ullavanae
Naanarinja mannavanae
Unnaalae oor vaazhum…
Chorus : Aa….hoi hoi

Female : Pattamaram poochchoriyum
Paaraiyilum nee vadiyum
Unnaalae ennaalum….
Chorus : Aa…..hoi hoi

Female : Paattaaliyin koottaali nee
Elloorum paaraatta
Chorus : Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa

Female : Maalai poda tholai kodu
Maelam kotta naalai kodu
Chorus : Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa

Female : Neeyum naanum neerum meenum
Paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..

Female : Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru

Chorus : Laalaa laala laalaa
Laalaa laala laalaa

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹோய்ய்ய்ய்ய்ய்……யா…….

பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே…..

பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு

பெண் : எட்டுத் திசை பாக்கையிலும்
எந்த வழி போகையிலும்
எங்கேயும் உன் பேச்சு
குழு : ஆ….ஹோய் ஹோய்

பெண் : மஞ்சள் வெயில் மாலையிலும்
மெத்தையிடும் வேளையிலும்
எண்ணங்கள் சூடாச்சு……
குழு : ஆ….ஹோய் ஹோய்

பெண் : நஞ்சை நிலம் நான் வாழத்தான்
நீதானே நீர் மேகம்
குழு : தானானனா தானானனா
தானான தானானனா

பெண் : தூறல் போடு இப்போதுதான்
தோட்டம் பூக்கும் அப்போதுதான்
குழு : தானா தானா தானானனா
தானா தானா தானானனா

ஆண் : ஆசை தீர தோளைச் சேர
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே…..

பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு

குழு : …………………….

பெண் : நல்ல மனம் உள்ளவனே
நானறிஞ்ச மன்னவனே
உன்னாலே ஊர் வாழும்…..
குழு : ஆ….ஹோய் ஹோய்

பெண் : பட்டமரம் பூச்சொரியும்
பாறையிலும் நீர் வடியும்
உன்னாலே எந்நாளும்……
குழு : ஆ….ஹோய் ஹோய்

பெண் : பாட்டாளியின் கூட்டாளி நீ
எல்லோரும் பாராட்ட
குழு : தானானனா தானானனா
தானான தானானனா

பெண் : மாலை போட தோளை கொடு
மேளம் கொட்ட நாளை கொடு
குழு : தானா தானா தானானனா
தானா தானா தானானனா

பெண் : நீயும் நானும் நீரும் மீனும்
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே…..

பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு…….

குழு : லாலா லால லாலா
லாலா லால லாலா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here