Singer : Nivas

Music by : James Vasanthan

Lyrics by : Thamarai

Male : Enna solla yaedhu solla
Vaazhkkai verum vaarththai illa
Patta pinnae puthi varum
Yaaro ingae nyaani illa

Male : Idhuthaan vaazhkkaiyinnu
Ninaikkira pozhuthinilae
Thalai keezhaa maariduthae
Kann imaikkum neraththula

Male : Kangalil thondrum kadhal
Valiyaagi pogirathu
Valiyodu vaazh solli
Kai aatti selgirathu

Male : Idaivelai vaazhkkaiyil illai
Mudiyum varai oivae illai
Ulagaththil paasam pola
Edhuvumae uyaram illai

Male : Kadhalum kadavulum ondru
Irandumae therivathu illai
Iruppathaai nambi kondu
Vaazhgiromae mudivae illai

Male : Irukkumpothu ellaam ingae
Perithaaga theriyaathu
Izhantha pinnae edhuvum ingae
Azhuthaalum thirumpaathu

Male : Yaasiththaal vaazhkkai varavu
Suvaasiththaal vaazhkkai selavu
Nesiththaal vaazhkkai azhagu
Yosiththaal vaazhkkai sarugu

பாடகர் : நிவாஸ்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

பாடலாசிரியர் : தாமரை

ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல
வாழ்க்கை வெறும் வார்த்தை இல்ல
பட்ட பின்னே புத்தி வரும்
யாரோ இங்கே ஞானி இல்ல

ஆண் : இதுதான் வாழ்க்கையின்னு
நினைக்கிற பொழுதினிலே
தலை கீழா மாறிடுதே
கண் இமயக்கும் நேரத்துல

ஆண் : கண்களில் தோன்றும் காதல்
வலியாகி போகிறது
வலியோடு வாழச் சொல்லி
கை ஆட்டி செல்கிறது

ஆண் : இடைவேளை வாழ்கையில் இல்லை
முடியும் வரை ஓய்வே இல்லை
உலகத்தில் பாசம் போல
எதுவுமே உயரம் இல்லை

ஆண் : காதலும் கடவுளும் ஒன்று
இரண்டுமே தெரிவது இல்லை
இருப்பதாய் நம்பி கொண்டு
வாழ்கிறோமே முடிவே இல்லை

ஆண் : இருக்கும் போது எல்லாம் இங்கே
பெரிதாக தெரியாது
இழந்த பின்னே எதுவும் இங்கே
அழுதாலும் திரும்பாது

ஆண் : யாசித்தால் வாழ்க்கை வரவு
சுவாசித்தால் வாழ்க்கை செலவு
நேசித்தால் வாழ்க்கை அழகு
யோசித்தால் வாழ்க்கை சருகு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here