Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Female : Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam

Male : Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam

Female : Oridam paartha vizhi
Veridam paarppadhillai
Unndam vandha manam
Ennidam saeravillai

Male : Maanidam petra vizhi
Madhiyidam petra mugam
Thaenidam kattra mozhi
Thaeridam kattra nadai

Male : Ezhudhaa
Female : Mhum
Male : Kavidhai
Female : Ahahahaa
Male : Ival thaan adadaa…

Female : Enna sugam enna sugam
Male : Unnidam naan kanda sugam
Female : Aa… haa haa haa

Female : Sandhana maenigalin
Sangama vaelaiyilae
Sindhiya muthukkalai
Saethidum kaalam idhu

Male : Thaen kani kottaiyilae
Sittridai vaasalilae
Thorana megalaiyil
Thondriya kolamidhu

Male : Enna sugam enna sugam
Female : Unnidam naan kanda sugam

Male : Maargazhi nal iravil
Mangiya ven nilavil
Kaarkuzhal seer thiruthi
Kaigalil saerthanaithu

Female : Mangaiyar nenjinilae
Manmadhan nee ezhudhum
Kungkuma kolangalil
Mangala vannangalai

Female : Maravaai
Male : Mhmm
Female : Rasithaen
Male : Mhmm
Female : Edhaiyo ninaithaen

Both : Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam
Aahahahaa… haahahahaa…
Mmm mmm mmm mm mmm mmm…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆண் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

பெண் : ஓரிடம் பார்த்த விழி
வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம்
என்னிடம் சேரவில்லை

ஆண் : மானிடம் பெற்ற விழி
மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி
தேரிடம் கற்ற நடை

ஆண் : எழுதா
பெண் : ம்ஹும்
ஆண் : கவிதை
பெண் : ஆஹா அஹா
ஆண் : இவள்தான் அடடா…..

ஆண் : என்ன சுகம் என்ன சுகம்
ஆண் : உன்னிடம் நான் கண்ட சுகம்
பெண் : ஆ…..ஹா ஹா ஹா

பெண் : சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை
சேர்த்திடும் காலம் இது

ஆண் : தேன் கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

ஆண் : என்ன சுகம் என்ன சுகம்
பெண் : உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆண் : மார்கழி நள்ளிரவில்
மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர்த்திருத்தி
கைகளில் சேர்த்தணைத்து

பெண் : மங்கையின் நெஞ்சினிலே
மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின்
மங்கல வண்ணங்களை

பெண் : மறைவாய்
ஆண் : ம்ஹும்
பெண் : ரசித்தேன்
ஆண் : ம்ஹ்ம்ம்
பெண் : எதையோ நினைத்தேன்

இருவர் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹஅஹஹா…..ஹாஹஹஹா….
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here