Singer : Seerkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Kannadasan

Male : Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo

Male : Paarththathum poiyendraal
Nee vanthathum poiyendraal
Naan paarththathum poiyendraal
Nee vanthathum poiyendraal
Bakthiyin vilai ennadaa
Kumara bakthiyin nilai ennadaa

Male : Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo

Male : Yaeriya mayilin siragu irandum
Engu paranthana azhagaa
Enniyirunthavan yaengi mayangida
Indru unakkithu azhagaa

Male : Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo

Male : Valli maadhu ennumpothu
Vanthavan neeyandro
Kallamindri unnai nambi
Vanthavan naanandro

Male : Valli maadhu ennumpothu
Vanthavan neeyandro
Kallamindri unnai nambi
Vanthavan naanandro
Odivaa velavaa oorellaam kaanavaa
Odivaa velavaa oorellaam kaanavaa

Male : Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo

Male : Kandha nama om saranam potri
Murugaa saravana malarae potri
Velaa arupadai venthae potri
Vaaraai orumurai kumaraa potri

Male : {Andraikku arunagiri
Nampikkai kondapadi
Nee vanthanaiyallavaa

Male : Indraikku un maganai
Sothippathenna gunam
Idhu vanjanai allavaa} (2)

Male : Kadharugindrean padharugindraen
En bakthi poiyaavathaa
Un sakthi poiyaavathaa

Male : Velum mayilum varuga varuga
Hari om muruga varuga varuga
Intha bhoomi ariya varuga varuga
Nee varuvaai varavillaiyael
Naan varuvaen naan varuvaen

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ

ஆண் : பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
நான் பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
பக்தியின் விலை என்னடா
குமரா பக்தியின் நிலை என்னடா…….

ஆண் : என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ

ஆண் : ஏறிய மயிலின் சிறகு இரண்டும்
எங்கு பறந்தன அழகா
எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட
இன்று உனக்கிது அழகா……

ஆண் : ஏறிய மயிலின் சிறகு இரண்டும்
எங்கு பறந்தன அழகா
எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட
இன்று உனக்கிது அழகா……

ஆண் : என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ

ஆண் : வள்ளி மாது எண்ணும்போது
வந்தவன் நீயன்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி
வந்தவன் நானன்றோ

ஆண் : வள்ளி மாது எண்ணும்போது
வந்தவன் நீயன்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி
வந்தவன் நானன்றோ
ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஆண் : என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ

ஆண் : கந்தா நம ஓம் சரணம் போற்றி
முருகா சரவண மலரே போற்றி
வேலா அறுபடை வேந்தே போற்றி
வாராய் ஒருமுறை குமரா போற்றி

ஆண் : {அன்றைக்கு அருணகிரி
நம்பிக்கை கொண்டபடி
நீ வந்தனையல்லவா

ஆண் : இன்றைக்கு உன் மகனை
சோதிப்பதென்ன குணம்
இது வஞ்சனை அல்லவா} (2)

ஆண் : கதறுகின்றேன் பதறுகின்றேன்
என் பக்தி பொய்யாவதா
உன் சக்தி பொய்யாவதா…….

ஆண் : வேலும் மயிலும் வருக வருக
ஹரி ஓம் முருகா வருக வருக
இந்த பூமி அறிய வருக வருக
நீ வருவாய் வரவில்லையேல்
நான் வருவேன் நான் வருவேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here