Singer : Prasanna Rao and Chinmayi

Music by : Srikanth Deva

Lyrics by : Thamarai

Male : Ennai theendi vittaa
Thiri thoondivittaal
Ennai naanae tholaiththuvittaen
Oor maargazhaiyin mun pani iravil
Ennai naanae eriththuvittaen

Male : Ennai theendi vittaa
Thiri thoondivittaal
Ennai naanae tholaiththuvittaen
Oor maargazhaiyin mun pani iravil
Ennai naanae eriththuvittaen

Male : Ennai theendi vittaa
Thiri thoondivittaal
Ennai naanae tholaiththuvittaen
Oor maargazhaiyin mun pani iravil
Ennai naanae eriththuvittaen

Male : Idhazhin oram Izhainthu oodum
Aval sirippi vizhunthuvittaen
Aval koondhal ennum yaeni
Adhai pidiththae ezhunthuvittaen

Male : Karainthu pogum kaattril aadum
Aval moochchil karainthuvittaen
Idhu pothum idhu pothum
En vaazhvai vaazhnthuvittan

Female : En raaththiril un sooriyanai
Edharkaaga eriyavittaai
En kanavugalil un nilavugalai
Edharkaaga karugavittaai

Female : Enathu thottaam unathu pookkal
Edharkaaga udhiravittaai
Manathodu manal veedu
Edharkaaga sedhukkivittaai

Female : Enathu kaattril unathu moochchai
Edharkaaga anuppivaiththaal
Uyir indri udal vaazha
Pinbu yaen nee thookkivittaai

Female : ………….

பாடகர்கள் : பிரசன்னா ராவ் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : தாமரை

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்
திரி தூண்டிவிட்டாள்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்
திரித் தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்
திரித் தூண்டிவிட்டாள்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண் : இதழின் ஓரம் இழைந்து ஓடும்
அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்
அவள் கூந்தல் என்னும் ஏணி
அதை பிடித்தே எழுந்துவிட்டேன்

ஆண் : கரைந்து போகும் காற்றில் ஆடும்
அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்
இது போதும் இது போதும்
என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை
எதற்காக எரியவிட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருகவிட்டாய்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை
எதற்காக எரியவிட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருகவிட்டாய்

பெண் : எனது தோட்டம் உனது பூக்கள்
எதற்காக உதிரவிட்டாய்
மனதோடு மணல் வீடு
எதற்காக செதுக்கிவிட்டாய்

பெண் : எனது காற்றில் உனது மூச்சை
எதற்க்காக அனுப்பிவைத்தாய்
உயிர் இன்றி உடல் வாழ
பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்

பெண் : …………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here