Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Male : Un thunbam paavam ariyaatha pillai
Un thunbam paavam ariyaatha pillai
Annaalai polae innaalil illai
Female : Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Female : Oru kodi ennam uruvaagum vannam
Vilaiyaadinaanae oraandu munnam
Oru kodi ennam uruvaagum vannam
Vilaiyaadinaanae oraandu munnam
Vaadaa en raja vadaatha roja
Aadamal nindraai yaenintha mounam
Male : Edhirparththa yaavum vithi paarththathaalae
Edhirparththa yaavum vithi paarththathaalae
Idhu polae kannae magan maarinaanae
Unai pola naanum manam vaadinaalum
Oru vaarththai solla idhu neramalla
Female : Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen
Female : Naan konda anbil yaedhaenum kuraivaa
Naan konda anbil yaedhaenum kuraivaa
Yaenintha sogam nee sollu iraivaa
Nooraandu kaalam magan vaazha vendum
Noyattra vaazhvai naan kaana vendum
Male : Eliyorin vaazhvil sila neram deivam
Vilaiyaadumpothu naam enna seivom
Naam seitha paavam azhuthenna laabam
Kaalangal ponaal kanneerum maarum
Female : Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
ஆண் : உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை
பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
பெண் : ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்
விளையாடினானே ஓராண்டு முன்னம்
ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்
விளையாடினானே ஓராண்டு முன்னம்
வாடா என் ராஜா வாடாத ரோஜா
ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம்
ஆண் : எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே
எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே
இது போல கண்ணே மகன் மாறினானே
உனைப் போல நானும் மனம் வாடினாலும்
ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல
பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன்
பெண் : நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா
நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா
ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா
நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும்
நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்
ஆண் : எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம்
விளையாடும்போது நாம் என்ன செய்வோம்
நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம்
காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்
பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை