Singers : Kovai Soundararajan and P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Male : Kannae idhu kanavallavae
Kanavil vantha kadhaiyallavae….

Female : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Female : Kadhal ennum uravum sugamum
Kannil vantha pothu thookkam enbathaethu
Thookkam enbathaethu

Male : Kovai ennum idhazhum suvaiyum
Kollai konda pothu
Yaekkam enbathaethu yaekkam enbathethu

Female : Pangu vaiththa paavaiyin angam undu ingae
Paavai unnai thedum aasaiyil vaadum
Male : Iravum pagalum arivom arivom
Ilamai muzhuthm peruvom peruvom

Female : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Female : …………….

Female : Maalai vantha nilavum paniyum
Ennai thotta pothu
Thendral vitta thoothu
Thendral vitta thoothu

Male : Kaalai konda manamum niraivum
Gangai konda vellam
Inbam konjum illam
Inbam konjum illam

Female : Mangai konda vedhanai konjamalla andru
Vaasal varai vanthathu aasai konda nenju
Male : Mudhalil kavithai ezhuthu ezhuthu
Female : Mudivil malarum uravu uravu

Female : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Male : Kannae idhu kanavallavae
Kanavil vantha kadhaiyallavae….

Female : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Female : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

பாடகர்கள் : கோவை சுந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

ஆண் : கண்ணே இது கனவல்லவே
கனவில் வந்த கதையல்லவே…….

ஆண் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் : காதல் என்னும் உறவும் சுகமும்
கண்ணில் வந்த போது தூக்கம் என்பதேது
தூக்கம் என்பதேது

ஆண் : கோவை என்னும் இதழும் சுவையும்
கொள்ளைக் கொண்ட போது
ஏக்கம் என்பதேது ஏக்கம் என்பதேது

பெண் : பங்கு வைத்த பாவையின் அங்கம் உண்டு இங்கே
பாவை உன்னைத் தேடும் ஆசையில் வாடும்
ஆண் : இரவும் பகலும் அறிவோம் அறிவோம்
இளமை முழுதும் பெறுவோம் பெறுவோம்

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் : ………………………

பெண் : மாலை வந்த நிலவும் பனியும்
என்னைத் தொட்ட போது
தென்றல் விட்ட தூது
தென்றல் விட்ட தூது

ஆண் : காளை கொண்ட மனமும் நிறைவும்
கங்கை கொண்ட வெள்ளம்
இன்பம் கொஞ்சும் இல்லம்
இன்பம் கொஞ்சும் இல்லம்

பெண் : மங்கை கொண்ட வேதனை கொஞ்சமல்ல அன்று
வாசல் வரை வந்தது ஆசை கொண்ட நெஞ்சு
ஆண் : முதலில் கவிதை எழுது எழுது
பெண் : முடிவில் மலரும் உறவு உறவு..

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

ஆண் : கண்ணே இது கனவல்லவே
கனவில் வந்த கதையல்லவே…….

ஆண் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here