Singer : P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Male : Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa

Male : Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa

Male : Udalooril vaazhndhirundhen
Uravooril midhandhirundhen
Karuvooril kudi pugundhen
Mannooril vizhundhu vitten
Kannooril thavazhndhirundhen
Kaiyooril valarndhirundhen
Kaalooril nadandhu vandhen
Kaalaiyoor vandhu vitten

Male : Veloorai paarthu vitten
Vizhiyooril kalandhu vitten
Paaloorum paruvam ennum
Pattinathil kudi pogundhen

Male : Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa

Male : Kaadhaloor kaattiyaval
Kaattooril vittu vittaal
Kanniyoor marandhavudan
Kadalooril vizhundhu vitten
Pallathoor thannil ennai
Parithavikka vittu vittu
Maettooril andha mangai
Mel yeri nindru kondaal

Male : Keezhooril vaazhvadharkkum
Kili mozhiyaal illaiyadaa
Melooru povadharkkum
Velai varavillaiyadaa

Male : Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

ஆண் : எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

ஆண் : உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்

ஆண் : கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்

ஆண் : கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்

ஆண் : வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்

ஆண் : எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

ஆண் : காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்

ஆண் : கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

ஆண் : பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்

ஆண் : கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா

ஆண் : எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here