Singer : K. J. Yesudas

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Kannadasan

Male : Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Indru naalai enna vaazhkkai
Yaar arivaar

Male : Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan

Male : Irandu mara solai vaiththaan
Entha maram vaazha kandaan
Oottruvaan ootrinaalthaan
Kaaikkaatha maramum kaaikkum

Male : Thallaadum manathai kondu
Thaniyaaga nindraan indru
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae

Male : Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan

Male : Manathiloru aasai kondaan
Maalai soodi vaazha nindraan
Thedinaan kaaiyai kandaan
Thedaatha kaniyai kandaan

Male : Kanneeril odum vaazhvu
Adhu sollum paadhai nooru
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae

Male : Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan

Male : Kungumaththai kaiyil kondu
Kovil kaana odi sendraan
Kovilai kandaan illai
Avan thedum dhepam illai

Male : Thanneeril neruppai kandaan
Thaalaatha sogam kondaan
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae

Male : Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Indru naalai enna vaazhkkai
Yaar arivaar

Male : Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன வாழ்க்கை
யார் அறிவார்….

ஆண் : எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண் : இரண்டு மரச்சோலை வைத்தான்
எந்த மரம் வாழக் கண்டான்
ஊற்றுவான் ஊற்றினால் தான்
காய்க்காத மரமும் காய்க்கும்

ஆண் : தள்ளாடும் மனதைக் கொண்டு
தனியாக நின்றான் இன்று
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே

ஆண் : எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண் : மனதிலொரு ஆசை கொண்டான்
மாலை சூடி வாழ நின்றான்
தேடினான் காயைக் கண்டான்
தேடாத கனியைக் கண்டான்

ஆண் : கண்ணீரில் ஓடும் வாழ்வு
அது சொல்லும் பாதை நூறு
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே

ஆண் : எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண் : குங்குமத்தை கையில் கொண்டு
கோவில் காண ஓடிச் சென்றான்
கோவிலைக் கண்டான் இல்லை
அவன் தேடும் தீபம் இல்லை

ஆண் : தண்ணீரில் நெருப்பைக் கண்டான்
தாளாத சோகம் கொண்டான்
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே

ஆண் : எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன வாழ்க்கை
யார் அறிவார்….

ஆண் : எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here