Singers : S. Janaki and P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female : Enthan anbe sonthamae neethaan endrum
Male : Enthan anbe sonthamae neethaan endrum
Female : Vinnmeengal udhirum kaalam varinum
Ullamathu maarumo unnai vitu pogumo

Male : Enthan anbe sonthamae neethaan endrum
Female : Enthan anbe sonthamae neethaan endrum

Male : Mannavan enthan nenjam
Mangai nee vaazhum manjam
Female : Kannilae kadhal konjum
Kanni naan unthan thanjam

Male : Enathu manam endrum unnodu
Veru oru pennai naadaathu
Female : Ilamai pongum kanni poomaathu
Innoruvar kayil seraathu

Male : Odum nadhiyae unnai thodarnthu
Dhinam varum nizhal naanae
Ullamathu maarumo unnai vitu pogumo

Female : Enthan anbe sonthamae neethaan endrum
Male : Enthan anbe sonthamae neethaan endrum

Female : Vannangal vaanil maarum
Vaazhkkaiyum orr naal maarum
Male : Kaalangal maarumpothum
Kadhalo nenjil vaazhum

Female : Valarum pirai vaanil thaeinthaalum
Anbu manam endrum thaeyaathu
Male : Imayamathu saainthu veezhnthaalum
Endrum intha kadhal saayaathu

Female : Vaazhum varaikkum nammai pirikka
Thadai ingae illai endraen
Ullamathu maarumo unnai vitu pogumo

Male : Enthan anbe sonthamae neethaan endrum
Female : Enthan anbe sonthamae neethaan endrum
Male : Vinnmeengal udhirum kaalam varinum
Ullamathu maarumo unnai vitu pogumo

Both : Ullamathu maarumo unnai vitu pogumo….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

ஆண் : மன்னவன் எந்தன் நெஞ்சம்
மங்கை நீ வாழும் மஞ்சம்
பெண் : கண்ணிலே காதல் கொஞ்சும்
கன்னி நான் உந்தன் தஞ்சம்

ஆண் : எனது மனம் என்றும் உன்னோடு
வேறு ஒரு பெண்ணை நாடாது
பெண் : இளமை பொங்கும் கன்னி பூமாது
இன்னொருவர் கையில் சேராது

ஆண் : ஓடும் நதியே உன்னை தொடர்ந்து
தினம் வரும் நிழல் நானே…….
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

பெண் : வண்ணங்கள் வானில் மாறும்
வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்
ஆண் : காலங்கள் மாறும்போதும்
காதலோ நெஞ்சில் வாழும்

பெண் : வளரும் பிறை வானில் தேய்ந்தாலும்
அன்பு மனம் என்றும் தேயாது
ஆண் : இமயமது சாய்ந்து வீழ்ந்தாலும்
என்றும் இந்த காதல் சாயாது

பெண் : வாழும் வரைக்கும் நம்மை பிரிக்க
தடை இங்கே இல்லை என்றேன்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

இருவர் : உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here