Singer : P. Jayachandran

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Iththanai siriya manithan dhinamum
Eduppathu dhasaavadhaaram
Iththanai siriya manithan dhinamum
Eduppathu dhasaavadhaaram

Male : Saththiyam pesum gunaththinilae
Avan krishnan avathaaram
Dharmaththai kaakkum nadippinilae
Avan sriraman avadhaaram

Male : Thaliyai maraiththu oorai yaeippathil
Koorma avadhaaram
Santharppam kidaiththaal ovvoru manithanum
Narasimma avadhaaram

Male : Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Male : Idam theriyaamal vizhuvathilae
Avan varaaha avadhaaram
Inam theriyaamal edhirpathilae
Avan vaaman avadhaaram

Male : Pidipadum pothu nazhuvuvathil
Avan machcha avadhaaram
Pirarai keduppathil eduppathuthaanae
Micha avadhaaram…..micha avadhaaram

Male : Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Male : Kannondru kaanum vaayondru pesum
Irattai vedamadaa
Kaattrulla pothae thoottrikkol enbathu
Manithanin paadamadaa

Male : Penn veri kondavan evanaalum
Thaayae thaaramadaa
Intha pedhaigalai naam ninaippathu kooda
Nenjukku paaramadaa

Male : Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Iththanai siriya manithan dhinamum
Eduppathu dhasaavadhaaram

Male : Eththanai avathaaran adadaa eththanai avathaaram

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
இத்தனை சிறிய மனிதன் தினமும்
எடுப்பது தசாவதாரம்….
இத்தனை சிறிய மனிதன் தினமும்
எடுப்பது தசாவதாரம்….

ஆண் : சத்தியம் பேசும் குணத்தினிலே
அவன் கிருஷ்ணன் அவதாரம்
தர்மத்தை காக்கும் நடிப்பினிலே
அவன் ஸ்ரீராமன் அவதாரம்

ஆண் : தலையை மறைத்து ஊரை ஏய்ப்பதில்
கூர்ம அவதாரம்…
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொரு மனிதனும்
நரசிம்ம அவதாரம்…..

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

ஆண் : இடம் தெரியாமல் விழுவதிலே
அவன் வராஹ அவதாரம்
இனம் தெரியாமல் எதிர்ப்பதிலே
அவன் வாமன அவதாரம்

ஆண் : பிடிபடும் போது நழுவுவதில்
அவன் மச்ச அவதாரம்
பிறரை கெடுப்பதில் எடுப்பதுதானே
மிச்ச அவதாரம்….மிச்ச அவதாரம்

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

ஆண் : கண்ணொன்று காணும் வாயொன்று பேசும்
இரட்டை வேடமடா
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது
மனிதனின் பாடமடா

ஆண் : பெண் வெறிக் கொண்டவன் எவனானாலும்
தாயே தாரமடா
இந்த பேதைகளை நாம் நினைப்பது கூட
நெஞ்சுக்கு பாரமடா…

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
இத்தனை சிறிய மனிதன் தினமும்
எடுப்பது தசாவதாரம்….

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here