Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela,

Vani Jairam and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Male : Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal

Male : Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal
Idhu veedalla naadellaam kondaadum
Koyil aagaadho

Female : Ini naalellaam aanandham
Thaen sindhum paadal kaetkaadho

Female : En dheivam neeyae
Oli dheepam neeyae
Innaalai polae ennaalum vaazhga

All : Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal

Male : Pillaigalae pudhu yugam ezhundhadhu
Oli mazhai pozhindhadhu nanaivom indru
Paadungalaen ini varum thalaimurai
Anaivarum oru nilai adaivom endru

Female : Anbu selvangalae kodiyil aadum mullaigalae
Ungal ullangalae endrum engal selvangalae
Un sondham thaedi en jenmam kodi
Pon maalai soodi varum vaanampaadi

All : Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal

Female : Yaadhum oorae ilakkiyam sonnadhu
Ilakkanam aanadhu naeril kanden
Yaarum ingae uravenum ninaivilae
Anbenum nadhiyilae aada kanden

Male : Naalum ingae panathilae midhandhavan
Iruttilae irundhavan ulagai kanden
Naanum indrae thalaivanin madiyilae
Kuzhandhaiyaai valargiren uruvai kanden

Female : Ullam ondraanadhu
Anbin vellam undaanadhu
Endrum maaraadhadhu
Adhilae inbam nooraanadhu

Male : En pillai neeyae kodi mullai neeyae

Female : Un paasam thaanae naan unnum thaenae

All : Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா,

வாணி ஜெயராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்

ஆண் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும்
கோயில் ஆகாதோ

பெண் : இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும்
பாடல் கேட்காதோ

பெண் : என் தெய்வம் நீயே
ஒளி தீபம் நீயே
இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்

ஆண் : பிள்ளைகளே புது யுகம் எழுந்தது
ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று
பாடுங்களேன் இனி வரும் தலைமுறை
அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று

பெண் : அன்புச் செல்வங்களே
கொடியில் ஆடும் முல்லைகளே
உங்கள் உள்ளங்களே
என்றும் எங்கள் செல்வங்களே
உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி
பொன் மாலை சூடி வரும் வானம்பாடி

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்

பெண் : யாதும் ஊரே இலக்கியம் சொன்னது
இலக்கணம் ஆனது நேரில் கண்டேன்
யாரும் இங்கே உறவெனும் நினைவிலே
அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன்

ஆண் : நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன்
இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன்
நானும் இன்றே தலைவனின் மடியிலே
குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன்

பெண் : உள்ளம் ஒன்றானது
அன்பின் வெள்ளம் உண்டானது
என்றும் மாறாதது
அதிலே இன்பம் நூறானது

ஆண் : என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே

பெண் : உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here