Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : ………………….

Male : Edhirkaalam oli veesum
Puvi yaavum unai pesum
Edhirkaalam oli veesum
Puvi yaavum unai pesum

Male : Ullangal undaanaal
Ennangal nandraanaaal
Engengu sendraalum
Ennenna seithaalum
Ninaiththathu yaavum nadakkaatho
Nee vithaiththathu yaavum mulaikkaatho

Male : Nedu vaanam nilam kaattrum
Alai paayum kulir ootru
Nedu vaanam nilam kaattrum
Alai paayum kulir ootru

Male : Ellaamae ellaarkkum undaana selvangal
Ondralla rendalla kann konda inbangal
Padiththavai yaavum namakkaaga
Naam rasiththida vendum adharkaaga

Male : Edhirkaalam oli veesum
Puvi yaavum unai pesum

Male : Isai nynam avan thanthaan
Dhinam paada thunai seithaan
Isai nynam avan thanthaan
Dhinam paada thunai seithaan

Male : Sangeetham ennaalum deiveegam endraagum
Sonnaalum kettaalum urchaagam undaagum
Pirar nalan paadum manam vendum
Ingae adhai vida verenna gunam vendum

Male : Edhirkaalam oli veesum
Puvi yaavum unai pesum

Male : Ullangal undaanaal
Ennangal nandraanaal

Male : Silar vaazhvil sila velai
Uruvaagum pudhu paadhai
Silar vaazhvil sila velai
Uruvaagum pudhu paadhai

Male : Santhikkum kannukkul sonthangal undaagum
Sollaamal kollaamal panthangal undaagum
Uravugal koodum ariyaamal
Adhil ninaivugal vaadum puriyaamal

Male : Edhirkaalam oli veesum
Puvi yaavum unai pesum
Engengu sendraalum
Ennenna seithaalum
Ninaiththathu yaavum nadakkaatho
Nee vithaiththathu yaavum mulaikkaatho

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ………………

ஆண் : எதிர்காலம் ஒளி வீசும்
புவி யாவும் உனை பேசும்
எதிர்காலம் ஒளி வீசும்
புவி யாவும் உனை பேசும்

ஆண் : உள்ளங்கள் உண்டானால்
எண்ணங்கள் நன்றானால்
எங்கெங்கு சென்றாலும்
என்னென்ன செய்தாலும்
நினைத்தது யாவும் நடக்காதோ
நீ விதைத்தது யாவும் முளைக்காதோ…..

ஆண் : நெடு வானம் நிலம் காற்று
அலை பாயும் குளிர் ஊற்று
நெடு வானம் நிலம் காற்று
அலை பாயும் குளிர் ஊற்று

ஆண் : எல்லாமே எல்லார்க்கும் உண்டான செல்வங்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல கண் கொண்ட இன்பங்கள்
படித்தவை யாவும் நமக்காக
நாம் ரசித்திட வேண்டும் அதற்காக

ஆண் : எதிர்காலம் ஒளி வீசும்
புவி யாவும் உனை பேசும்

ஆண் : இசை ஞானம் அவன் தந்தான்
தினம் பாட துணை செய்தான்
இசை ஞானம் அவன் தந்தான்
தினம் பாட துணை செய்தான்

ஆண் : சங்கீதம் எந்நாளும் தெய்வீகம் என்றாகும்
சொன்னாலும் கேட்டாலும் உற்சாகம் உண்டாகும்
பிறர் நலன் பாடும் மனம் வேண்டும்
இங்கே அதைவிட வேறென்ன குணம் வேண்டும்

ஆண் : எதிர்காலம் ஒளி வீசும்
புவி யாவும் உனை பேசும்

ஆண் : சிலர் வாழ்வில் சில வேளை
உருவாகும் புது பாதை
சிலர் வாழ்வில் சில வேளை
உருவாகும் புது பாதை

ஆண் : சந்திக்கும் கண்ணுக்குள் சொந்தங்கள் உண்டாகும்
சொல்லாமல் கொள்ளாமல் பந்தங்கள் உண்டாகும்
உறவுகள் கூடும் அறியாமல்
அதில் நினைவுகள் வாடும் புரியாமல்

ஆண் : எதிர்காலம் ஒளி வீசும்
புவி யாவும் உனை பேசும்

ஆண் : உள்ளங்கள் உண்டானால்
எண்ணங்கள் நன்றானால்
எங்கெங்கு சென்றாலும்
என்னென்ன செய்தாலும்
நினைத்தது யாவும் நடக்காதோ
நீ விதைத்தது யாவும் முளைக்காதோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here