Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Male : Yaezhaikku vaazhvu naalaikku endru
Evan sonnaalum nambaathae
Avan sonnathu polae seivaan endru
Nenaichchu nenaichchu nee vempaathae….

Male : Yaezhaikku vaazhvu naalaikku endru
Evan sonnaalum nambaathae
Avan sonnathu polae seivaan endru
Nenaichchu nenaichchu nee vempaathae….

Male : Poonaikku evandaa mani kattuvaan
Intha bhoomikku evandaa buththi solluvaan
Poonaikku evandaa mani kattuvaan
Intha bhoomikku evandaa buththi solluvaan

Male : Soththukkillaathava munthaan virichchaa
Court-kku azhaichchu poraanga
Periya idaththu pombala senjaa
Therinju theriyaama irukaanga….

Male : Soththukkillaathava munthaan virichchaa
Court-kku azhaichchu poraanga
Periya idaththu pombala senjaa
Therinju theriyaama irukaanga….

Male : Vasathikku valaiyuthu sattam
Idhai veliyil sonnaa enna kuththam
Vasathikku valaiyuthu sattam
Idhai veliyil sonnaa enna kuththam

Male : Yaezhaikku vaazhvu naalaikku endru
Evan sonnaalum nambaathae
Avan sonnathu polae seivaan endru
Nenaichchu nenaichchu nee vempaathae….

Male : Bus -la oruththan jeppadi senjaa
Pala per saernthu udhaippaanga
Padhaviyil irunthu kollai adichchaa
Periya thalaivarunnu thudhippaanga

Male : Bus- la oruththan jeppadi senjaa
Pala per saernthu udhaippaanga
Padhaviyil irunthu kollai adichchaa
Periya thalaivarunnu thudhippaanga

Male : Pathavikku valaiyuthu sattam
Idha eduththu sonnaa enna kuththam
Pathavikku valaiyuthu sattam
Idha eduththu sonnaa enna kuththam

Male : Yaezhaikku vaazhvu naalaikku endru
Evan sonnaalum nambaathae
Avan sonnathu polae seivaan endru
Nenaichchu nenaichchu nee vempaathae….

Male : Thallaadum kezhavan dharumam kettaa
Thambidi tharaama thittuvaanga
Koyilil irukkum undiyal niraiya
Kaasu panaththa kottuvaanga

Male : Thallaadum kezhavan dharumam kettaa
Thambidi tharaama thittuvaanga
Koyilil irukkum undiyal niraiya
Kaasu panaththa kottuvaanga

Male : Ippadi irukkuthu ulagam
Idhil yaezhaikku yaedhu velicham
Ippadi irukkuthu ulagam
Idhil yaezhaikku yaedhu velicham

Male : Yaezhaikku vaazhvu naalaikku endru
Evan sonnaalum nambaathae
Avan sonnathu polae seivaan endru
Nenaichchu nenaichchu nee vempaathae….
Oo…oo….oo…oo…oo…oo…oo….oo…oo….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : ஏழைக்கு வாழ்வு நாளைக்கு என்று
எவன் சொன்னாலும் நம்பாதே
அவன் சொன்னது போலே செய்வான் என்று
நெனச்சு நெனச்சு நீ வெம்பாதே….

ஆண் : ஏழைக்கு வாழ்வு நாளைக்கு என்று
எவன் சொன்னாலும் நம்பாதே
அவன் சொன்னது போலே செய்வான் என்று
நெனச்சு நெனச்சு நீ வெம்பாதே….

ஆண் : பூனைக்கு எவன்டா மணி கட்டுவான்
இந்த பூமிக்கு எவன்டா புத்தி சொல்லுவான்
பூனைக்கு எவன்டா மணி கட்டுவான்
இந்த பூமிக்கு எவன்டா புத்தி சொல்லுவான்

ஆண் : சோத்துக்கில்லாதவ முந்தான விரிச்சா
கோர்ட்டுக்கு அழைச்சு போறாங்க
பெரிய இடத்து பொம்பள செஞ்சா
தெரிஞ்சு தெரியாம இருக்காங்க….

ஆண் : சோத்துக்கில்லாதவ முந்தான விரிச்சா
கோர்ட்டுக்கு அழைச்சு போறாங்க
பெரிய இடத்து பொம்பள செஞ்சா
தெரிஞ்சு தெரியாம இருக்காங்க….

ஆண் : வசதிக்கு வளையுது சட்டம்
இதை வெளியில் சொன்னா என்ன குத்தம்….
வசதிக்கு வளையுது சட்டம்
இதை வெளியில் சொன்னா என்ன குத்தம்….

ஆண் : ஏழைக்கு வாழ்வு நாளைக்கு என்று
எவன் சொன்னாலும் நம்பாதே
அவன் சொன்னது போலே செய்வான் என்று
நெனச்சு நெனச்சு நீ வெம்பாதே….

ஆண் : பஸ்ஸுல ஒருத்தன் ஜேப்படி செஞ்சா
பல பேர் சேர்ந்து உதைப்பாங்க
பதவியில் இருந்து கொள்ளை அடிச்சா
பெரிய தலைவருன்னு துதிப்பாங்க

ஆண் : பஸ்ஸுல ஒருத்தன் ஜேப்படி செஞ்சா
பல பேர் சேர்ந்து உதைப்பாங்க
பதவியில் இருந்து கொள்ளை அடிச்சா
பெரிய தலைவருன்னு துதிப்பாங்க

ஆண் : பதவிக்கு வளையுது சட்டம்
இத எடுத்து சொன்னா என்ன குத்தம்…
பதவிக்கு வளையுது சட்டம்
இத எடுத்து சொன்னா என்ன குத்தம்…

ஆண் : ஏழைக்கு வாழ்வு நாளைக்கு என்று
எவன் சொன்னாலும் நம்பாதே
அவன் சொன்னது போலே செய்வான் என்று
நெனச்சு நெனச்சு நீ வெம்பாதே….

ஆண் : தள்ளாடும் கெழவன் தருமம் கேட்டா
தம்பிடி தராம திட்டுவாங்க
கோயிலில் இருக்கும் உண்டியல் நிறைய
காசு பணத்த கொட்டுவாங்க

ஆண் : தள்ளாடும் கெழவன் தருமம் கேட்டா
தம்பிடி தராம திட்டுவாங்க
கோயிலில் இருக்கும் உண்டியல் நிறைய
காசு பணத்த கொட்டுவாங்க

ஆண் : இப்படி இருக்குது உலகம்
இதில் ஏழைக்கு ஏது வெளிச்சம்…..
இப்படி இருக்குது உலகம்
இதில் ஏழைக்கு ஏது வெளிச்சம்…..

ஆண் : ஏழைக்கு வாழ்வு நாளைக்கு என்று
எவன் சொன்னாலும் நம்பாதே
அவன் சொன்னது போலே செய்வான் என்று
நெனச்சு நெனச்சு நீ வெம்பாதே….
ஓ….ஓ…..ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ….ஓ…..ஓ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here