Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Female : Ezhu kadal naayagiyae
Eswari dhevi
Ammaa eswari dhevi
Naanga eduthadhellaam
Nadathi vaippaai
Aayiram kan kaali

Chorus : Ezhu kadal naayagiyae
Eswari dhevi
Ammaa eswari dhevi
Naanga eduthadhellaam
Nadathi vaippaai
Aayiram kan kaali

Female : Kannilae kanal vadithu
Mannilae kaaval nindru

Chorus : Kodumai kandu kumarum katti
Elimai kandu urugum katti

Female : Anbu manadhai alli eduthaai
Asuran thalaiyai killi eduthaai

Chorus : Chithira kaali enga bathira kaali
Chithira kaali enga bathira kaali

Female & Chorus : Ezhu kadal naayagiyae
Eswari dhevi
Ammaa eswari dhevi
Naanga eduthadhellaam
Nadathi vaippaai
Aayiram kan kaali

Female : Kaadu malai maedu kanda neeliyae
Naanga kannukkullae yetri vaitha jothiyae

Chorus : Kaadu malai maedu kanda neeliyae
Naanga kannukkullae yetri vaitha jothiyae

Female : Ambigaiyae enga nambikkaiyae

Chorus : Un sannadhikku naada vandha
Kaaranam enna
Enga nimmadhiyai thaedi vandhom
Vaeru vazhi enna

Chorus : Kaadu malai maedu kanda neeliyae
Naanga kannukkullae yetri vaitha jothiyae

Female : Vaanam varai ongi nirkkum
Manjal muga annaiyae

Chorus : Aarum varai paathu ingu
Andi vandhom unnaiyae

Female : Aanavarai kettu vitten
Needhiyum illae
Nallaa pona varai poga vittu
Pottu vittom mella

Chorus : Kaadu malai maedu kanda neeliyae
Naanga kannukkullae yetri vaitha jothiyae

Female : Thirudanum om sakthi
Sakthiyae endru thaan
Thiruneeru poosugindraan
Dharumathai nambiyae
Dhinam thorum vaazhndhavan
Thaayunnai thaedi vandhaan

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி

குழு : ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி

பெண் : கண்ணிலே கனல் வடித்து
மண்ணிலே காவல் நின்று

குழு : கொடுமை கண்டு குமுறும் சக்தி
எளிமை கண்டு உருகும் சக்தி
பெண் : அன்பு மனதை அள்ளி எடுத்தாய்
அசுரர் தலையை கிள்ளி எடுத்தாய்

குழு : சித்திரக்காளி எங்க பத்திரக்காளி
சித்திரக்காளி எங்க பத்திரக்காளி

பெண் மற்றும் குழு :
ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி

பெண் : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே

குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே

பெண் : அம்பிகையே எங்க நம்பிக்கையே

குழு : உன் சன்னதிக்கு நாட வந்த
காரணம் என்ன
எங்க நிம்மதியைத் தேடி வந்தோம்
வேறு வழி என்ன

குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே

பெண் : வானம் வரை ஓங்கி நிற்கும்
மஞ்சள் முக அன்னையே

குழு : ஆறும் வரை பாத்து இங்கு
அண்டி வந்தோம் உன்னையே

பெண் : ஆனவரை கேட்டு விட்டேன்
நீதியும் இல்லே
நல்லா போனவரை போகவிட்டு
போட்டு விட்டோம்
மெல்ல

குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே

பெண் : திருடனும் ஓம் சக்தி
சக்தியே என்றுதான்
திருநீறு பூசுகின்றான்
தர்மத்தை நம்பியே
தினந்தோறும் வாழ்பவன்
தாயுன்னைத் தேடி வந்தான்

பெண் : அவன் பூஜை இவன் பூஜை
யார் பூஜை ஏற்கின்றாய்
ஆதாரம் சொல்லு தாயே
யார் பக்கம் நிற்கின்றாய்
யார் காவல் காக்கின்றாய்
பைரவி பேசு நீயே…..

குழு : {மாக்காளி பைரவி ஓம் சக்தி பைரவி
ஆதார பைரவி ஆனந்த பைரவி} (2)

குழு : பைரவி பைரவி பைரவி
பைரவி பைரவி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here