Singers : Soolamangalam Rajalakshmi and M. R. Vijaya

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Poovai Senguttavan

Females : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan

Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan

Female : Thiruchendur vadivelum
Thiruthanigai maamayilum

Females : Thiruchendur vadivelum
Thiruthanigai maamayilum
Sanga tamizhil kanthan pugzhai
Paada solli kettu varum
Kanthan pugazhai kettu kettu
Velum mayilum aadi varum

Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan

Females : Pazhamudhirchozhai panneerum
Swaami malai thiruneerum
Pazhamudhirchozhai panneerum
Swaami malai thiruneerum
Valli kanavan murugan peyarai
Paada solli arul koorum
Vanna kavithai paada paada
Vaazhvum valamum thaedi varum

Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan

Females : Pazhanimalai panjamirutham
Parangundra santhanamum
Pazhanimalai panjamirutham
Parangundra santhanamum
Ullam thannil inbam thanthu
Kumaran arulai paadi varum
Pillai tamizhai alli thanthu
Perum pugazhum saerththu vidum

Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan

Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Paadu paadu endru sonnaan

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் எம். ஆர். விஜயா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண்கள் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

பெண் : திருச்செந்தூர் வடிவேலும்
திருத்தணிகை மாமயிலும்

பெண்கள் : திருச்செந்தூர் வடிவேலும்
திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப்
பாடச் சொல்லிக் கேட்டு வரும்
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு
வேலும் மயிலும் ஆடி வரும்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

பெண்கள் : பழமுதிர்சோலைப் பன்னீரும்
சுவாமிமலை திருநீறும்
பழமுதிர்சோலைப் பன்னீரும்
சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப்
பாடச் சொல்லி அருள் கூறும்
வண்ணக் கவிதை பாடப் பாட
வாழ்வும் வளமும் தேடி வரும்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

பெண்கள் : பழனிமலைப் பஞ்சாம்ருதமும்
பரங்குன்றச் சந்தனமும்
பழனிமலைப் பஞ்சாம்ருதமும்
பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து
குமரன் அருளைப் பாடி வரும்
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து
பேரும் புகழும் சேர்த்து விடும்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பாடு பாடு என்று சொன்னான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here