Singers : Anuradha Sriram and K.S. Chithra

 Music by : Deva

Female : Muthu muthu magalae
Mugam kaanaatha magalae
Maadhangal pathu manadhinil sumandhu
Karpanaiyil petra kanmaniyae
Naan unakku kavidhayil yezhudhum kaditham

Female : Ezhudhugiren oru kaditham
Ezhudhugiren oru kaditham
Vanathu malarae vaiyathu nilavae
Vaazhkayin porulae vaa
Ezhudhugiren oru kaditham

Female : Maladiyin magalae
Magal enum kanavae
Madiyinil vizha nee vaa
Ezhudhugiren oru kaditham

Female : Paarayil malarndha thaamaraiyae
Iravanil yezhundha sooriyanae
Yezhaamalae yezhum nila neeyae
Ezhudhugiren oru kaditham
Ezhudhugiren oru kaditham

Female : Munooru naal garbathilae
Vaaradha penn neeyadi
Yennaalumae naan bommai thaan
Yendraalum thaai thaanadi

Female : Ullavum vaanampaadiyaai
Panpaadi vaazhga kannae
Puravai pola saanthamaai
Panpaadu potru pennae

Female : Naaloru mennmai
Nee peruvaai
Naan petra inbam
Yaar peruvaar
Peraamalae perum sugam neeyae
Ezhudhugiren oru kaditham
Ezhudhugiren oru kaditham

Female : Sindhamani yen kanmani
Sitraadai nee kattadi
Yen maaligai mutrathilae
Pon oonjal nee aadadi

Female : Kulaavum anbu kokilam
Yengeyum gaanam paada
Kanaavil kooda sombalae
Illaamal gnaanam theda

Female : Nallavalagha nadai podu
Vallaval aagida thadai yedhu
Vizhaamalae vizhum mazhai neeyae
Ezhudhugiren oru kaditham
Ezhudhugiren oru kaditham

Female : Ezhudhugiren oru kaditham
Ezhudhugiren oru kaditham
Polladhadhu un bhoomi thaan
Poraattam thaan vaazhvadi
Kollamalae kolvaaradi
Kutrangal solvaaradi

Female : Varaadha thunbam vaazhvilae
Vandhaalum neril modhu
Peraadha vetri illayae
Endrae nee vedham odhu
Oomaikkum naakkugal vendumadi
Urimaikku porida thevayadi
Thodamalae sudum kanal neeyae

Female : Vanathu malarae vaiyathu nilavae
Vaazhkayin porulae vaa
Ezhudhugiren oru kaditham

Female : Maladiyin magalae
Magal enum kanavae
Madiyinil vizha nee vaa
Ezhudhugiren oru kaditham

Female : Paarayil malarndha thaamaraiyae
Iravanil yezhundha sooriyanae
Yezhaamalae yezhum nila neeyae
Ezhudhugiren oru kaditham
Ezhudhugiren oru kaditham

பாடகிகள் : கே.எஸ். சித்ரா, அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : முத்து முத்து மகளே
முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து மனதினில்
சுமந்து கற்பனையில் பெற்ற
கண்மணியே நான் உனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்

பெண் : எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன் ஒரு
கடிதம் வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
வா எழுதுகிறேன் ஒரு கடிதம்

பெண் : மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் விழ நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பெண் : பாறையில் மலர்ந்த
தாமரையே இரவினில் எழுந்த
சூரியனே எழாமலே எழும் நிலா
நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பெண் : முன்னூறு நாள்
கர்ப்பத்திலே வாராத பெண்
நீயடி எந்நாளுமே நான்
பொம்மை தான் என்றாலும்
தாய் தானடி

பெண் : உலாவும் வானம்
பாடியாய் பண்பாடி வாழ்க
கண்ணே புறாவை போல
சாந்தமாய் பண்பாடு
போற்று பெண்ணே

பெண் : நாளொரு மேன்மை
நீ பெறுவாய் நான் பெற்ற
இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம்
நீயே எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன்
ஒரு கடிதம்

பெண் : சிந்தாமணி என்
கண்மணி சிற்றாடை நீ
கட்டடி என் மாளிகை
முற்றத்திலே பொன்
ஊஞ்சல் நீ ஆடடி

பெண் : குலாவும் அன்பு
கோகிலம் எங்கேயும்
கானம் பாட கனாவில்
கூட சோம்பலே இல்லாமல்
ஞானம் தேட

பெண் : நல்லவளாக நடை
போடு வல்லவள் ஆகிட
தடை ஏது விழாமலே விழும்
மழை நீயே எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன் ஒரு
கடிதம்

பெண் : எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன் ஒரு
கடிதம் பொல்லாதது உன்
பூமி தான் போராட்டம் தான்
வாழ்வடி கொல்லாமலே
கொல்வாரடி குற்றங்கள்
சொல்வாரடி

பெண் : வராத துன்பம்
வாழ்விலே வந்தாலும்
நேரில் மோது பெறாத
வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள்
வேண்டுமடி உரிமைக்கு
போரிட தேவையடி
தொடாமலே சுடும்
கனல் நீயே

பெண் : வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
வா எழுதுகிறேன் ஒரு கடிதம்

பெண் : மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் விழ நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பெண் : பாறையில் மலர்ந்த
தாமரையே இரவினில் எழுந்த
சூரியனே எழாமலே எழும் நிலா
நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here