Singer : S. A. Rajkumar

Music by : S. A. Rajkumar

Male : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Antha aagaayam pola ennaama kodukkum
Ponnaana manasirukkum
Endrum moodaatha koyil
Un vaasal kadhavu eppothum thiranthu irukkum

Male : Antha vettaruvaa meesaikkuththaan
Ettoorum paninjirukkum
Avar thottu thantha nellumani
Muppogam vilainjirukkum

Chorus : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola

Male : Vaigai aarumthaan kadala paakkala
Vaasudevar manam kadalaachchi
Chorus : Enga vaasudevar manam kadalaachchi

Male : Vaazhkkai vellaththil naanga moozhgala
Vaasudevar kai padakaachchi
Chorus : Enga vaasudevar kai padakaachchi

Male : Kovilukulla dheivam irukku
Thedi vantha dheivam inga irukku
Chorus : Naanga thedi vantha dheivam inga irukku

Male : Veettukku veedu eriyuthunga
Vaasudevar yaththiya oli vilakku
Chorus : Enga vaasudevar yaththiya oli vilakku

Chorus : Enga usurellaam ooduruvum
Unnoda punsirippu
Enga manasaalum mannanukku
Maththaappu varaverppu

Male : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola

Chorus : ……………..

Male : Villu vandiyila pogum midukkula
Veeram velaiyuthu kazhaniyilae
Chorus : Adha kettu paarunga vedalaigala

Male : Paarvai onnuthaan vaarththai onnuthaan
Baisal seiyyuthu vazhakkugal
Chorus : Ingu court-tu case-gannu kavalaiyilla

Male : Suththi eriyum entha neruppum
Thottathundu unnai suttathillai
Chorus : Adha thottathundu unnai suttathillai

Male : Saththiyaththaiyum dharmaththaiyum
Kaaththirukkum enga dharmathurai
Chorus : Unga kannukkullae irukkom kavalaiyillai

Male : Inga nadamaadum sooriyanai
Kumbittu ponga vachchom
Enga pasi theerththa dharmanukku
Pallaakku thookki nirppom

Male : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola

Chorus : Antha aagaayam pola ennaama kokkum
Ponnaana manasirukkum
Endrum moodaatha koyil
Un vaasal kadhavu eppothum thiranthu irukkum

Male : Antha vettaruvaa meesaikkuththaan
Ettoorum paninjirukkum
Avar thottu thantha nellumani
Muppogam vilainjirukkum

Male : Ezhunthaal malai pola
Chorus : Ezhunthaal malai pola
Male : Nadanthaal nadhi pola
Chorus : Nadanthaal nadhi pola….

பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்
பொன்னான மனசிருக்கும்
என்றும் மூடாத கோயில்
உன் வாசல் கதவு எப்போதும் திறந்து இருக்கும்

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்
எட்டூரும் பணிஞ்சிருக்கும்
அவர் தொட்டு தந்த நெல்லுமணி
முப்போகம் விளைஞ்சிருக்கும்….

குழு : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல

ஆண் : வைகை ஆறும்தான் கடல பாக்கல
வாசுதேவர் மனம் கடலாச்சி
குழு : எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி

ஆண் : வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல
வாசுதேவர் கை படகாச்சி
குழு : எங்க வாசுதேவர் கை படகாச்சி

ஆண் : கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு
தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு
குழு : நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு

ஆண் : வீட்டுக்கு வீடு எரியுதுங்க
வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு
குழு : எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு

குழு : எங்க உசுரெல்லாம் ஊடுருவும்
உன்னோட புன்சிரிப்பு
எங்க மனசாளும் மன்னனுக்கு
மத்தாப்பு வரவேற்பு….

ஆண் : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல

குழு : …………………………….

ஆண் : வில்லு வண்டியில போகும் மிடுக்குல
வீரம் வெளையுது கழனியிலே
குழு : அத கேட்டுப் பாருங்க வெடலைகள

ஆண் : பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான்
பயிசல் செய்யுது வழக்குகள்
குழு : இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல

ஆண் : சுத்தி எரியும் எந்த நெருப்பும்
தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை
குழு : அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை

ஆண் : சத்தியத்தையும் தர்மத்தையும்
காத்திருக்கும் எங்க தர்மதுரை
குழு : உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை

ஆண் : இங்க நடமாடும் சூரியனை
கும்பிட்டு பொங்க வச்சோம்
எங்க பசி தீர்த்த தர்மனுக்கு
பல்லாக்கு தூக்கி நிற்போம்…

ஆண் : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல

குழு : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்
பொன்னான மனசிருக்கும்
என்றும் மூடாத கோயில்
உன் வாசல் கதவு எப்போதும் திறந்து இருக்கும்

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்
எட்டூரும் பணிஞ்சிருக்கும்
அவர் தொட்டு தந்த நெல்லுமணி
முப்போகம் விளைஞ்சிருக்கும்….

ஆண் : எழுந்தால் மலை போல
குழு : எழுந்தால் மலை போல
ஆண் : நடந்தால் நதி போல
குழு : நடந்தால் நதி போல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here