Singer : P. Susheela

Music by : T. Rajendar

Female : Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female : Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam

Female : Adhirstam irukkanum vaazhkai enbadhu
Adhai izhandhu vittaval edharkku vazhanum
Adhirstam irukkanum vaazhkai enbadhu
Adhai izhandhu vittaval edharkku vazhanum
Kai arugae mugarvatharkku mullai irukkum
Adhai karathaalae paripatharkku vaeli thadukkum

Female : Polladha aasaiaglai valarthadhen manam
Adhu poikkindra nerathilae yen vaadanum

Female : Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female : Thodarchiyaagavae ethanai tholvi
Adhai thandha iraiva unnidam kelvi
Thodarchiyaagavae ethanai tholvi
Adhai thandha iraiva unnidam kelvi
Tharuvadhu pol aarambathil yeno thandhaai
Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai

Female : Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam
Adhai ninaikkindra nerathilae yedhu aanandham

Female : Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female : Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது….
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது….

பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்

பெண் : அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும்
அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும்

பெண் : பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம்
அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும்

பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது….

பெண் : தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை
அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய்

பெண் : நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம்
அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம்

பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது….

பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here