Singer : T. M. Soundarajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa

Male : Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa

Male : Raman engae kugan thaan engae
Angadhan pirandhadhu thaan engae
Nanbargal aanaar manamum gunamum
Sangamam aanadhu angae

Male : Nellil irundhu umiyai pirithaal
Meendum servadhu engae
Nerungaadhu nerungivittaal
Piriya vidathu anbu

Male : Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa

Male : Sattam enbathu iruttarai endru
Arinjar sonnar andru
Dharumam ennum vilakkai kondu
Thedi paarungal endru

Male : Ovvoru manidhan ullathilum
Mirugamum deivamum undu
Mirugangalai viratti vittu
Deivangal aavom indru

Male : Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa

Male : Udal noi maruthuvam undu
Manadhil noikku enna marundhu
Ovvoru manadhaiyum aatti veikkindraar
Uyarathil oruvan irundhu

Male : Needhi nyaayam enbavai ellam
Thalaivan aalum aatchi
Neengal illai naanum illai
Avanae courtukkum saatchi

Male : Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ……….

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ……….

ஆண் : ராமன் எங்கே குகன்தான் எங்கே
அங்கதான் பிறந்ததுதான் எங்கே
நண்பர்கள் ஆனார் மனமும் குணமும்
சங்கமம் ஆனது அங்கே

ஆண் : நெல்லில் இருந்து உமியைப் பிரித்தால்
மீண்டும் சேர்வது எங்கே
நெருங்காது நெருங்கிவிட்டால்
பிரிய விடாது அன்பு …………….

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ……….

ஆண் : சட்டம் என்பது இருட்டறை என்று
அறிஞர் சொன்னார் அன்று
தருமம் என்னும் விளக்கைக் கொண்டு
தேடிப் பாருங்கள் என்று

ஆண் : ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும்
மிருகமும் தெய்வமும் உண்டு
மிருங்கங்களை விரட்டி விட்டு
தெய்வங்கள் ஆவோம் இன்று………

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ……….

ஆண் : உடல் நோய் மருத்துவம் உண்டு
மனதில் நோய்க்கு என்ன மருந்து
ஒவ்வொரு மனதையும் ஆட்டி வைக்கின்றார்
உயரத்தில் ஒருவன் இருந்து

ஆண் : நீதி நியாயம் என்பவை எல்லாம்
தலைவன் ஆளும் ஆட்சி
நீங்கள் இல்லை நானும் இல்லை
அவனே கோர்ட்டுக்கும் சாட்சி……..

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here