Singers : S. P. Balasubramanyam and Swarnalatha

Music by : Deva

Male : Gee priya gee priya
Gee priya nil
Vazhvodu perinbam
Engundu sol

Male : Gee priya gee priya
Gee priya nil
Vazhvodu perinbam
Engundu sol

Male : …………….

Female : Mannil inbam moththamum
Pennil thaanae ulladhu
Centimeter millimeter
Ovvondrum pennukkul inbam

Male : Unmaiya unmaiya
Unmaidhaanaa
Female : Unmaidhaan unmaidhaan
Unmaidhaanae

Chorus : ………….

Male : Ennangalum ennangalum
Iruvarin
Kannangalum kannangalum
Kaadhalil
Chinnangalum chinnangalum
Orumurai urasalaam

Female : Panneer mazhai
Panneer mazhai orudharam
Veneer mazhai
Veneer mazhai orudharam
Senthaen mazhai
Senthaen mazhai orudharam
Kulikkalaam

Male : Paarkadal neendhalaam
Paarkalaama
Paal nila vizhum varai
Neendhalaama

Female : Puyal pugundhu aadinaal
Poovin madal thaanguma
Sooriyanin thaagaththai
Panithuliyum theerkkuma

Male : Pani thuliyin
Aalathil sooriyanum moozhguma
Kattilmel pattimandram
Kaalayil theerpugal amma

Female : Kangalal kangalai
Moodalaama
Kaatilae paravaippol
Koodalaama

Male : Kannil oru minnal nadhi
Azhaikkudhu
Nenjil oru kaadhal idi
Idikkudhu
Ullae oru pacific kadal
Kodhikudhu theriyuma

Female : Kaadhal puyal ayyo
Karai kadakkudhu
Aadaigalum naanangalum
Parakkudhu
Aasai mazhai vellam
Anai udaikudhu theriyuma

Male : Edukkava thodukkava
Indha neram
Iruvarum kaanalaam
Idhu kaadhal paadam

Female : Serthu veitha aasaiyai
Selavazhikkum nerama
Aasai theerndhu ponadhum
Anbu theerndhu poguma

Male : Thevai theerndhu pogalaam
Thedal theerndhu poguma
Megam maarum minnal maarum
Vaan neelam maaraadhu amma

Female : Kangalal kangalai
Moodalaama
Kaatilae paravaippol
Koodalaama

Male : Gee priya gee priya
Gee priya nil
Vazhvodu perinbam
Engundu sol

Male : Ye gee priya gee priya
Gee priya nil nil
Vazhvodu perinbam
Engundu sol

Male : …………….

Female : Mannil inbam moththamum
Pennil thaanae ulladhu
Centimeter millimeter
Ovvondrum pennukkul inbam

Male : Unmaiya unmaiya
Unmaidhaanaa
Female : Unmaidhaan unmaidhaan
Unmaidhaanae

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும்
எஸ் பி பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண் : கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண் : ………………………………….

பெண் : மண்ணில் இன்பம்
மொத்தமும்
பெண்ணில் தானே உள்ளது
சென்டிமீட்டர் மில்லிமீட்டர்
ஒவ்வொன்றும்
பெண்ணுக்குள் இன்பம்

ஆண் : உண்மையா உண்மையா
உண்மைதானா
பெண் : உண்மைதான் உண்மைதான்
உண்மைதானே

குழு : ………………………………………

ஆண் : எண்ணங்களும்
எண்ணங்களும்
இருவரின்
கன்னங்களும் கன்னங்களும்
காதலில்
சின்னங்களும் சின்னங்களும்
ஒருமுறை உரசலாம்

பெண் : பன்னீர் மழை
பன்னீர் மழை ஒருதரம்
வெந்நீர் மழை
வெந்நீர் மழை ஒருதரம்
செந்தேன் மழை
செந்தேன் மழை ஒருதரம்
குளிக்கலாம்

ஆண் : பாற்கடல் நீந்தலாம்
பார்க்கலாமா
பால் நிலா விழும் வரை
நீந்தலாமா

பெண் : புயல் புகுந்து ஆடினால்
பூவின் மடல் தாங்குமா
சூரியனின் தாகத்தை
பனித்துளியும் தீர்க்குமா

ஆண் : பனி துளியின்
ஆழத்தில் சூரியனும் மூழ்குமா
கட்டில்மேலே பட்டிமன்றம்
காலையில் தீர்ப்புகள் அம்மா

பெண் : கண்களால் கண்களை
மூடலாமா
காட்டிலே பறவைப்போல்
கூடலாமா

ஆண் : கண்ணில் ஒரு மின்னல் நதி
அழைக்குது
நெஞ்சில் ஒரு காதல் இடி
இடிக்குது
உள்ளெ ஒரு பசிபிக் கடல்
கொதிக்குது தெரியுமா

பெண் : காதல் புயல் ஐயோ
கரை கடக்குது
ஆடைகளும் நானங்களும்
பறக்குது
ஆசை மழை வெள்ளம்
அணை உடைக்குது தெரியுமா

ஆண் : எடுக்கவா தொடுக்கவா
இந்த நேரம்
இருவரும் காணலாம்
இது காதல் பாடம்

பெண் : சேர்த்து வைத்த ஆசையை
செலவழிக்கும் நேரமா
ஆசை தீர்ந்து போனதும்
அன்பு தீர்ந்து போகுமா

ஆண் : தேவை தீர்ந்து போகலாம்
தேடல் தீர்ந்து போகுமா
மேகம் மாறும் மின்னல் மாறும்
வான் நீளம் மாறாது அம்மா

பெண் : கண்களால் கண்களை
மூடலாமா
காட்டிலே பறவைப்போல்
கூடலாமா

ஆண் : கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண் : கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண் : …………………………………

பெண் : மண்ணில் இன்பம்
மொத்தமும்
பெண்ணில் தானே உள்ளது
சென்டிமீட்டர் மில்லிமீட்டர்
ஒவ்வொன்றும்
பெண்ணுக்குள் இன்பம்

ஆண் : உண்மையா உண்மையா
உண்மைதானா
பெண் : உண்மைதான் உண்மைதான்
உண்மைதானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here