Singers : Sujatha and Unni Krishnan

Music by : Deva

Male : Gnyapagam irukkuthaa
Gnyapagam irukkuthaa
Female : …………………

Male : Gnyapagam irukkuthaa
Unnai kalai mudhal maalai varai
Kaththirunthu paarththathu gnyapagam irukkuthaa

Female : Ennai niththamoru aadai pottu
Paarkka vanthu ponathu gnyapagam irukkuthaa
Male : Unnai thotta thendralukkum
Thookkam kettu ponathae gnyapagam irukkuthaa

Female : Vikkal varum neramellaam
Vanthu pogum enthan peru gnyapagam irukkuthaa
Male : Poo vaiththathu……gnyapagam irukkuthaa
Female : Vanthu poovaaginaen gnyapagam irukkuthaa
Male : Gnyapagam irukkuthaa gnyapagam irukkuthaa

Male : Un meedhu naan saaya
Poi ondru solvenae gnyapagam irukkuthaa
Female : Poi sollum azhgai naan
Anbodu rasippaenae gnyapagam irukkuthaa

Male : Ennaatha podhu vanthu naan
Engaeyum killuvaen
Female : Un tholil naanum saanthuthaan
Thullamal thulluvaen

Male : Adi poovukkenna vaasam thaanga baaramaa
Female : Idhu kadhalukku neegal sollum vedhamaa
Male : Idhu kadhal varamthaanammaa….aa….aa….
Gnyapagam irukkuthaa gnyapagam irukkuthaa

Female : ………………

Female : Nee vaiththa maruthaani
Azhiyaamal kaaththaenae gnyapagam irukkuthaa
Male : dhinam vanthu adhai kaatti
Thiththikka seithaayae gnyapagam irukkuthaa

Female : Nenjodu oonjal aaduvaen gnyapagam irukkuthaa
Male : Sollaamal yaedho theduvaen gnyapagam irukkuthaa
Female : Nammodu vantha thendral kooda vaerkkuthu
Male : Vannangal poosi vaanavillum thottarathu
Female : Uyirodu uravaaduthu….oo….

Male : Gnyapagam irukkuthaa
Antha tajmahal pakkam vaiththu
Naanum unnai paarththathu gnyapagam irukkuthaa
Female : Antha shajakaanum neeyendru
Naanum unnai sonnathu gnyapagam irukkuthaa

Male : Sikkeduththu koonthal kondu
Ennai kaatti pottaththu gnyapagam irukkuthaa
Female : Pottu vaikka naanum unthan
Etchil thottu vaiththathu gnyapagam irukkuthaa

Male : Aarambamum gnyapagam irukkuthaa
Female : Kadhal uyir thanthathu gnyapagam irukkuthaa

Female : ………………….

பாடகர்கள் : சுஜாதா மற்றும் உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஞாபகம் இருக்குதா
ஞாபகம் இருக்குதா
பெண் : ………………………

ஆண் : ஞாபகம் இருக்குதா
உன்னை காலை முதல் மாலை வரை
காத்திருந்து பார்த்தது ஞாபகம் இருக்குதா

பெண் : என்னை நித்தமொரு ஆடை போட்டு
பார்க்க வந்து போனது ஞாபகம் இருக்குதா
ஆண் : உன்னைத் தொட்ட தென்றலுக்கு
தூக்கம் கெட்டு போனதே ஞாபகம் இருக்குதா

பெண் : விக்கல் வரும் நேரமெல்லாம்
வந்து போகும் எந்தன் பேரு ஞாபகம் இருக்குதா
ஆண் : பூ வைத்தது……ஞாபகம் இருக்குதா
பெண் : வந்து பூவாகினேன் ஞாபகம் இருக்குதா
ஆண் : ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா…..

ஆண் : உன் மீது நான் சாய
பொய் ஒன்று சொல்வேனே ஞாபகம் இருக்குதா
பெண் : பொய் சொல்லும் அழகை நான்
அன்போடு ரசிப்பேனே ஞாபகம் இருக்குதா

ஆண் : எண்ணாத போது வந்து நான்
எங்கேயும் கிள்ளுவேன்
பெண் : உன் தோளில் நானும் சாய்ந்துதான்
துள்ளாமல் துள்ளுவேன்

ஆண் : அடி பூவுக்கென்ன வாசம் தாங்க பாரமா
பெண் : இது காதலுக்கு நீங்கள் சொல்லும் வேதமா
ஆண் : இது காதல் வரம் தானம்மா……ஆ…..ஆ……..
ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா

பெண் : ………………………

பெண் : நீ வைத்த மருதாணி
அழியாமல் காத்தேனே ஞாபகம் இருக்குதா
ஆண் : தினம் வந்து அதைக் காட்டி
தித்திக்க செய்தாயே ஞாபகம் இருக்குதா

பெண் : நெஞ்சோடு ஊஞ்சல் ஆடுவேன் ஞாபகம் இருக்குதா
ஆண் : சொல்லாமல் ஏதோ தேடுவேன் ஞாபகம் இருக்குதா
பெண் : நம்மோடு வந்த தென்றல் கூட வேர்க்குது
ஆண் : வண்ணங்கள் பூசி வானவில்லும் தோற்றது
பெண் : உயிரோடு உறவாடுது…..ஊ…..

ஆண் : ஞாபகம் இருக்குதா
அந்த தாஜ்மகால் பக்கம் வைத்து
நானும் உன்னை பார்த்தது ஞாபகம் இருக்குதா
பெண் : அந்த ஷாஜகானும் நீயென்று
நானும் உன்னை சொன்னது ஞாபகம் இருக்குதா

ஆண் : சிக்கெடுத்த கூந்தல் கொண்டு
என்னைக் கட்டிப் போட்டது ஞாபகம் இருக்குதா
பெண் : பொட்டு வைக்க நானும் உந்தன்
எச்சில் தொட்டு வைத்தது ஞாபகம் இருக்குதா

ஆண் : ஆரம்பமும் ஞாபகம் இருக்குதா
பெண் : காதல் உயிர் தந்தது ஞாபகம் இருக்குதா…

பெண் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here