Singers : Unni Menon, Sujatha, S. P. Charan and Yugendran

Music by : S. A. Rajkumar

Lyrics by : Pa. Vijay

Chorus : Soodi thantha sudarkodiyae subavelai nee varuga
Thedi konda thiraviyamae thaen maalai pola varuga
Minnum ambu vizhi chanthira bimbam
Ponnoli veesa mangai maithili ival
Semmalar paatha thandaigal aada sangam soozha varuga
Srirangan thaalai adaiya valar thingalaagi varuga

Male : Gogulaththu radhai vanthaalo
Intha kalyaana thaerilae
Female Chorus : Kalyaana therilae
Male : Mithilai nagar seedhai vanthaalo
Engal veettodu vaazhavae
Male Chorus : Veettodu vaazhavae
Male : Antha thenmadurai meenaal
Vilakkettra vanthaal
Seethanamaai kayil
Thaaipaasam kondu vanthaal

Female : Gogulaththu rathai vanthaalo
Female and Female Chorus :
Intha kalyaana therilae…
Male : Mithilai nagar seedhai vanthaalo
Male and Male Chorus :
Engal veettodu vaazhavae

Female : Ponnu kondu vantha seer vaangi vaikka
Female and Female Chorus :
Perisaa veedu onnu kattunga
Male : Thanga maappillaikku eedaaga neenga
Male and male Chorus :
Innum paththu madangu kottunga

Male : Unga maappillaiyin nenjai ammaanai aadi
Saelaiyilae mudinji jeyippaalae
Male : Moonu muzham malligaipoovum
Konjam halwavum pothume
Chorus : Hae…yae….
Male : Entha ponnum aambalai nenjil
Adi thalai saanju mayangumae

Chorus : ………………

Female : Thanjavur bomma polaththaan
Unga maappillaiththaan thalaiyaattuvaar
Female Chorus : Aama thalaiyaattuvaar
Male : Desingu rajan engannan haei
Unga kudhirai vaalattumaa
Male Chorus : Aama vaalaattumaa

Female : Yaei thappaama
Enga ponnu seivaalae thanthiram
Singaththai katti podum
Thalaikaani manthiram

Male : Pottiyellaam pottu paaththomdi
Adhu namakkullathaanadi
Sodiyaththaan nallaa paarudi
Madhura meenatchi sokkandi

Male Chorus : Vellippani muttraththil
Vetkam enum thottaththil
Mallaigai pooththatho
Pudhu mallaigai pooththatho

Male Chorus : Maada kuyil saththaththil
Manjal mugam nanaththil
Mangalam vanthatho
Dhinam mangalam vanthathi

Male Chorus : Ini engal
Nenja koodaththil dheepa thiruvizha
Engal vaanil velichcham veesuthae
Chinna vennilaa

Male Chorus : Engal anbukku annan panbukku
Thendral santhanam poosutho
Engal veettukkul veesum thendralaai
Oru devathai vanthatho…oo…oo…oo…oo….

பாடகர்கள் : உன்னிமேனன், சுஜாதா, எஸ். பி. சரண் மற்றும் யுகேந்திரன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : பா. விஜய்

குழு : சூடி தந்த சுடர்க்கொடியே சுபவேளை நீ வருக
தேடிக் கொண்ட திரவியமே தேன் மாலை போல வருக
மின்னும் அம்பு விழி சந்திர பிம்பம்
பொன்னொளி வீச மங்கை மைதிலி இவள்
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட சங்கம் சூழ வருக
ஸ்ரீரங்கன் தாளை அடைய வளர் திங்களாகி வருக……

ஆண் : கோகுலத்து ராதை வந்தாளோ
இந்த கல்யாண தேரிலே…
பெண் குழு : கல்யாண தேரிலே…..
ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ
எங்கள் வீட்டோடு வாழவே
ஆண் குழு : வீட்டோடு வாழவே
ஆண் : அந்த தென்மதுரை மீனாள்
விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில்
தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்

பெண் : கோகுலத்து ராதை வந்தாளோ
பெண் மற்றும் பெண் குழு :
இந்த கல்யாண தேரிலே…
ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ
ஆண் மற்றும் ஆண் குழு :
எங்கள் வீட்டோடு வாழவே

பெண் : பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க
பெண் மற்றும் பெண் குழு :
பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க
ஆண் : தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க
ஆண் மற்றும் ஆண் குழு :
இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க

ஆண் : உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு
ஆண் : மூணு முழம் மல்லிகைப்பூவும்
கொஞ்சம் அல்வாவும் போதுமே
குழு : ஹே…..ஏ…….
ஆண் : எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்
அடி தலை சாஞ்சு மயங்குமே

குழு : ……………………….

பெண் : தஞ்சாவூர் பொம்மப் போலத்தான்
உங்க மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவார்
பெண் குழு : ஆமா தலையாட்டுவார்
ஆண் : தேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஹேய்
உங்க குதிரை வாலாட்டுமா…
ஆண் குழு : ஆமா வாலாட்டுமா…

பெண் : ஏய் தப்பாம
எங்கப் பொண்ணு செய்வாளே தந்திரம்
சிங்கத்தை கட்டிப் போடும்
தலைகாணி மந்திரம்

ஆண் : போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி
அது நமக்குள்ள தானடி
சோடியத்தான் நல்லாப் பாருடி
மதுர மீனாட்சி சொக்கன்டி….

ஆண் குழு : வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
புது மல்லிகை பூத்ததோ

ஆண் குழு : மாடக் குயில் சத்தத்தில்
மஞ்சள் முகம் நாணத்தில்
மங்கலம் வந்ததோ……
தினம் மங்கலம் வந்ததோ

ஆண் குழு : இனி எங்கள்
நெஞ்சக் கூடத்தில் தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா

ஆண் குழு : எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ ஓ…ஓ….ஓ….ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here