Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Gowri manogariyai kandaen
Oru aadavan vadivaththilae
Gowri manogariyai kandaen
Oru aadavan vadivaththilae
Paruangal sendraalum kannan
Avan kaviraja sangeetha mannan
Avan kaviraja sangeetha mannan

Male : En peril sugamaana raagam
Oru sridevi santhikkum yogam
En peril sugamaana raagam
Oru sridevi santhikkum yogam
Nee mazhai naalil vilaiyaadum megam
Enna vayathendr thondraatha vegam

Male : Gowri manogariyai kandaen
Oru aadavan vadivaththilae
Paruangal sendraalum kannan
Avan kaviraja sangeetha mannan

Female : Thaaraatha selvangal thaaimai
Avaiyaanaalum en ullam oomai
Kann munbu azhagaana aanmai
Naan kallalla kanivaana penmai

Female : Panpaadu enbaargal silarae
Idhil pennpaadu kandorgal evarae
En paadu naanthaanae ariven
Uyar anbodu manam pola inaiven

Female : Gowri manogariyai kandaen
Oru aadavan vadivaththilae

Male : Malai meedhu adiththaalum kaattru
Adhu kadal meedhu thavazhnthaalum kaattru
Vayathodu vanthaalum kadhal
Adhu vayathaagi vanthaalum kadhal

Male : Ulagaththil sila nooru ezhuththu
Aanaal uravukku palakodi karuththu
Un vaazhvai neeyaaga nadaththu
Idhil oorenna sonnaalum thiruththu

Female : Gowri manogariyai kandaen
Oru aadavan vadivaththilae
Paruangal sendraalum kannan
Avan kaviraja sangeetha mannan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கெளரி மனோகரியை கண்டேன்
ஒரு ஆடவன் வடிவத்திலே
கெளரி மனோகரியை கண்டேன்
ஒரு ஆடவன் வடிவத்திலே
பருவங்கள் சென்றாலும் கண்ணன்
அவன் கவிராஜ சங்கீத மன்னன்
அவன் கவிராஜ சங்கீத மன்னன்

ஆண் : என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
நீ மழை நாளில் விளையாடும் மேகம்
என்ன வயதென்று தோன்றாத வேகம்

ஆண் : கெளரி மனோகரியை கண்டேன்
ஒரு காரிகை வடிவத்திலே
பருவங்கள் சென்றாலும் ராதை
அவள் கவிராஜ சங்கீத மேதை

பெண் : தாராத செல்வங்கள் தாய்மை
அவையானாலும் என் உள்ளம் ஊமை
கண் முன்பு அழகான ஆண்மை
நான் கல்லல்ல கனிவான பெண்மை

பெண் : பண்பாடு என்பார்கள் சிலரே
இதில் பெண் பாடு கண்டோர்கள் எவரே
என் பாடு நான்தானே அறிவேன்
உயர் அன்போடு மனம் போல இணைவேன்

பெண் : கெளரி மனோகரியை கண்டேன்
ஒரு ஆடவன் வடிவத்திலே

ஆண் : மலை மீது அடித்தாலும் காற்று
அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று
வயதோடு வந்தாலும் காதல்
அது வயதாகி வந்தாலும் காதல்

ஆண் : உலகத்தில் சில நூறு எழுத்து
ஆனால் உறவுக்கு பலகோடி கருத்து
உன் வாழ்வை நீயாக நடத்து
இதில் ஊரென்ன சொன்னாலும் திருத்து

பெண் : கெளரி மனோகரியை கண்டேன்
ஒரு ஆடவன் வடிவத்திலே
ஆண் : கெளரி மனோகரியை கண்டேன்
ஒரு காரிகை வடிவத்திலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here