Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : I love u pani thaen malaiyae
I love u …mayakkum kalaiyae
Aadum oonjalgal polae
Enna thottrangale
Paadum moongilgal melae
Modhum ilanthendralae

Female : I love u pani thaen malaiyae
I love u …mayakkum kalaiyae

Female : Oru veenaiyilae isai vaasigindraal
Malai moginiyaal suvaiyaaga
Ezhil medaiyindri nadamaadugiraal
Pani mega magal sugamaaga
Ilanthottil aattum kundramae
Vilayaai kaattum mandramae

Female : I love u pani thaen malaiyae
I love u …mayakkum kalaiyae

Female : Palar vervaiyilae ival vaazhukindraal
Nalla pasumaiyudan uyarvaaga avar
Vedhainaiyai ini theerthu veippom
Indha dhesam engum nilaiyaaga
Avar naadu kaakkum selvangal
Indha kaadu kanda deivangal …aahahaaa

Female : I love u pani thaen malaiyae
I love u …mayakkum kalaiyae

Female : Oru devadhaiyin karungkoondhalai pol
Malai sarinthirukkum azhagaaga
Adhai vaari vittu oru poo mudikka
Ilangaatru varum idhamaaga
Indha inbalogam sorgamae
Engum indha oor en sondhamae

Female : I love u pani thaen malaiyae
I love u …mayakkum kalaiyae
Aadum oonjalgal polae
Enna thottrangale
Paadum moongilgal melae
Modhum ilanthendralae
Lalalalalalalala……

பாடகி :  வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஐ லவ் யூ…பனி தேன் மலையே
ஐ லவ் யூ….மயக்கும் கலையே
ஆடும் ஊஞ்சல்கள் போலே
என்ன தோற்றங்களே
பாடும் மூங்கில்கள் மேலே
மோதும் இளந்தென்றலே…

பெண் : ஐ லவ் யூ…பனி தேன் மலையே
ஐ லவ் யூ….மயக்கும் கலையே

பெண் : ஒரு வீணையிலே இசை வாசிக்கின்றாள்
மலை மோகினியாள் சுவையாக
எழில் மேடையின்றி நடமாடுகின்றாள்
பனி மேக மகள் சுகமாக
இளந்தொட்டில் ஆட்டும் குன்றமே
விளையாடி காட்டும் மன்றமே…

பெண் : ஐ லவ் யூ…பனி தேன் மலையே
ஐ லவ் யூ….மயக்கும் கலையே

பெண் : பலர் வேர்வையிலே இவள் வாழுகின்றாள்
நல்ல பசுமையுடன் உயர்வாக அவர்
வேதனையை இனி தீர்த்து வைப்போம்
இந்த தேசமெங்கும் நிலையாக
அவர் நாடு காக்கும் செல்வங்கள்
இந்த காடு கண்ட தெய்வங்கள்..ஆஹாஹா..

பெண் : ஐ லவ் யூ…பனி தேன் மலையே
ஐ லவ் யூ….மயக்கும் கலையே

பெண் : ஒரு தேவதையின் கருங்கூந்தலை போல்
மலை சரிந்திருக்கும் அழகாக
அதை வாரி விட்டு ஒரு பூ முடிக்க
இளங்காற்று வரும் இதமாக
இந்த இன்பலோகம் சொர்க்கமே
எங்கும் இந்த ஊர் என் சொந்தமே…

பெண் : ஐ லவ் யூ…பனி தேன் மலையே
ஐ லவ் யூ….மயக்கும் கலையே
ஆடும் ஊஞ்சல்கள் போலே
என்ன தோற்றங்களே
பாடும் மூங்கில்கள் மேலே
மோதும் இளந்தென்றலே…
லாலாலாலால ………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here